இரண்டாம் உலக போரில் பங்கேற்ற பெண்ணின் 102 வது பிறந்தநாளை கொண்டாடிய ஏர்லைன்ஸ்
இரண்டாம் உலக போரில் பங்கேற்ற ஹெலன் என்பவரின் 102-வது பிறந்தநாள் சமீபத்தில் கொண்டாடப்பட்டுள்ளது.
102 வது பிறந்தநாள்
இரண்டாம் உலக போரில் பங்கேற்ற பெண்ணின் 102-வது பிறந்தநாளை அமெரிக்காவில் உள்ள வெர்ஜினியா பகுதியை சேர்ந்த ஹெலன்மேரி ஹார்வத் என்பவர் விமானத்தில் கொண்டாடியுள்ளார்.
இந்த பெண் தனது 21வது வயதில் தனது இராணுவ பயணத்தை ஆரம்பித்துள்ளார். அந்த காலக்கட்டத்தில் நீர்மூழ்கி கப்பல்களை கண்டறிய பயன்படுத்தப்பட்ட கருவிகளை இவர் இயக்கியுள்ளார்.
சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்த அவரது மகன் தனது தாயக்கு பரிசளிக்க வேண்டும் என இதை செய்ய முயற்சி செய்துள்ளார்.
எனவே தயாயின் பிறந்த நாள் குறித்து சக ஊழியர்களிடம் தெரிவித்ததையடுத்து, அந்நிறுவனமும் உலக போரில் பங்கேற்ற ஹெலன்மேரி ஹார்வத்தின் 102-வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட முடிவு செய்துள்ளது.
அதன்படி ஹெலன் மேரி ஹார்வத்தை விமானத்தில் அழைத்து வந்து அவர் செயின்ட் லூயிசில் இறங்கியதும் ஊழியர்கள் அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்.
அதையடுத்து அவருக்கு அமெரிக்க கொடிகள் அசைக்கப்பட்டு, ஹெலனின் தலையில் கிரீடம் அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார்கள்.
மேலும் ஏராளமானோர் ஹெலனின் பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான ஒரு சில வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.