30 ஆண்டுகளாக தந்தை என நம்பிய நபர் குறித்து தெரியவந்த உண்மை: பெண்ணொருவருக்கு DNA சோதனை கொடுத்த அதிர்ச்சி
ஜேர்மன் பரம்பரையில் வந்த தன் தந்தைக்கு மகள் கொடுத்த பரிசொன்று, அவர் அந்தப் பெண்ணின் தந்தையே இல்லை என்று கூற, அந்தக் குடும்பமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.
தந்தைக்கு மகள் கொடுத்த பரிசால் ஏற்பட்ட குழப்பம்
இப்போதெல்லாம் பல நாடுகளில் மக்கள் குடும்ப வரலாற்றை அறிய உதவும் DNA கிட்களை பரிசாகக் கொடுக்கிறார்கள். ஆனால், அந்த பரிசுகள் பல குடும்பங்களில் குழப்பங்களை உருவாக்கியுள்ளன.
தந்தை வழியில் ஜேர்மானிய மூதாதையரையும், தாய் வழியில் ஐரோப்பிய, இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து மூதாதையரையும் கொண்ட ஒரு பெண், தன் தந்தைக்கு DNA கிட் ஒன்றை பரிசாகக் கொடுத்துள்ளார்.
DNA சோதனை கொடுத்த அதிர்ச்சி
அந்தப் பெண்ணின் தந்தைக்கும் தாய்க்கும் நீல நிற கருவிழி கொண்ட கண்கள். ஆனால், அந்தப் பெண்ணுக்கோ அடர் பழுப்பு நிறக்கண்கள். இதைக் குறித்து எப்போதுமே அந்தக் குடும்பத்தினர் வேடிக்கையாக பேசிக்கொள்வார்களாம்.
ஆனால், தந்தையும் மகளும் செய்துகொண்ட DNA சோதனை முடிவுகள், வேடிக்கையாக பேசிக்கொண்ட விடயங்கள் உண்மையோ என்ற அதிர்ச்சியை உருவாக்கின.
ஆம், இரண்டு பேருடைய DNAவுக்கும் சம்பந்தமேயில்லை. அது மட்டுமல்ல, தந்தைக்கு முந்தைய நான்கு தலைமுறையினரில் யாருடைய DNAவும் அந்தப் பெண்ணின் DNAவுடன் ஒத்துப்போகவில்லை.
அதாவது, அந்தப் பெண், அந்த நபரின் சொந்த மகள் அல்ல. அவரது உண்மையான தந்தை யார் என தனது தாயிடம் கேட்கலாம் என்றால், 2017ஆம் ஆண்டே அவர் இறந்துபோய்விட்டார்.
DNA சோதனை முடிவுகளைக் கண்டு, தந்தையும் மகளும் ஆளுக்கொரு பக்கம் தலையில் கைவைத்துக்கொண்டு உட்கார்ந்துவிட்டார்கள்.
30 ஆண்டுகளாக அப்பா என அழைத்த நபர் தன் தந்தையில்லை என அறிந்து அந்த பெண்ணும், 40 ஆண்டுகள் மகிழ்ச்சியான திருமண வாழ்வு வாழ்ந்தும், இறுதியில் தன் மகள், தான் பெற்ற மகள் அல்ல என அறிந்து அந்த தந்தையும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.