போராட்டத்தில் குதித்துள்ள அரச துறை அதிகாரிகள்
அனைத்து அரச துறை அதிகாரிகளும் சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இப்போராட்டமானது இன்று (29.1.2024) இடம்பெறும் என அரச நிர்வாக அதிகாரிகளின் கூட்டுக் குழு தெரிவித்துள்ளது.
குறித்த போராட்டம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
தொழிற்சங்க நடவடிக்கை
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த தொழில் சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அனைத்து அரச துறை அதிகாரிகளும் இன்று (29) சுகயீன விடுப்பில் ஈடுபட்டு தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர்.
இதன்போது, அரச துறையின் அனைத்து நிறைவேற்று உத்தியோகத்தர்கள் கலந்து கொள்ளும் மாநாடு நடைபெறவுள்ளதாக குழுவின் தலைவர் எச்.எல்.ஏ.உதயசிறி தெரிவித்துள்ளார்.