உங்க குழந்தை வாயை திறந்துகிட்டே தூங்குதா ?பெற்றோர்களே உஷார்!
வீட்டுக் குழந்தைகளை தூங்க வைப்பதே பெரும் பாடு. அதனால் பெரும்பாலும் பெற்றோர்கள் குழந்தைகள் தூங்கியவுடன் ஓய்வெடுக்க ஆரம்பித்து விடுகிறோம்.
அல்லது வேறு வேலைகளில் மூழ்கி விடுகிறோம். இனியாவது குழந்தை தூங்கினால் கவனிங்க. வாயைத் திறந்துகிட்டே தூங்குதா, மூடிக்கிட்டு தூங்குதான்னு செக் பண்ணுங்க!
பொதுவாக அனைவருமே மூக்கின் வழியாகத் தான் சுவாசிக்கிறோம். பிறந்ததலிருந்து 3அல்லது 4 மாதம் வரை உள்ள குழந்தைகள் தூங்கும் போது மூக்கிற்கு பதிலாக வாய்வழியாக சுவாசிக்கும்.
அதற்குப் பிறகு வாய்வழியாக சுவாசிக்க ஒரே காரணம் அவர்களின் நாசி பாதை தடைபட்டு இருப்பதே. இது உங்க குழந்தையின் மேல் சுவாசப் பாதையில் அடைப்பு இருப்பதை காட்டுகிறது. இது ஒரு சில ஒவ்வாமை தொற்றால் ஏற்படலாம். இதை அப்படியே விடும் போது இன்னும் சில சிக்கலான நிலைக்கு இழுத்துச் செல்ல வாய்ப்புள்ளது.
வாய் வழியாக சுவாசிப்பது உங்க குழந்தைக்கு என்றும் பலனளிக்காது. ஏனெனில் வாய்வழியாக சுவாசிக்கும் போது உங்க உடலுக்கு குறைந்த அளவு ஆக்ஸிஜன் மட்டுமே கிடைக்கும். அதே மாதிரி உங்க மூக்கு தான் பாக்டீரியா மற்றும் காற்றில் இருக்கும் தூசி மாசுக்களை வடிகட்ட உதவும். இதுவே நீங்கள் வாய்வழியாக சுவாசித்தால் இந்த செயல்கள் எல்லாம் நடக்காது.
உங்க குழந்தையின் மூக்கு சளியால் தடைபட்டு போய் இருந்தால் அவர்கள் வாய்வழி சுவாசத்தை மேற்கொள்வார்கள். சளிப் பிரச்சினை காய்ச்சல் மற்றும் சில ஒவ்வாமை பிரச்சினைகளால் ஏற்படலாம். எனவே நீங்கள் முதலில் குழந்தையின் சளிக்கு நிவாரணம் அளிக்க வேண்டும்.
மேலும் வாய் வழியாக சுவாசிக்கும் போது குறைந்த அளவு ஆக்ஸிஜன் மட்டும் கிடைப்பதால் காலப்போக்கில் குழந்தைக்கு இதய பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது. மேலும் அவர்கள் மூக்கால் சுவாசிக்கும் குழந்தைகளைப் போல நிம்மதியாக தூங்குவதில்லை.
எனவே அவர்களின் ஆரோக்கியத்தில் ஒட்டுமொத்த விளைவுகள் ஏற்படுகிறது என்கிறார்கள் குழந்தைகள் நல மருத்துவர்கள்.