இந்த படம் பார்த்தா கோபமா வருது… ராதிகா சரத்குமார் வைரல் பதிவு : எந்த படத்தை சொல்கிறார்?
முன்னணி குணச்சித்திர நடிகையாக வலம் வரும் ராதிகா சரத்குமார் தற்போது தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் , நெட்டிசன்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் ராதிகா சரத்குமார். 1978-ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியாக கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான ராதிகா, அடுத்து ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சரத்குமார், உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.
தமிழ் மட்டுமல்லமல், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிப்படங்களிலும் நடித்துள்ள ராதிகா சரத்குமார், சின்னத்திரை சீரியல்களிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்தார். இவர் நடிப்பில் வெளியான சித்தி, வாணி ராணி, அண்ணாமலை உள்ளிட்ட சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக சித்தி தொடர் ராதிகாவுக்கு சின்னத்திரையில் ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரித்தது என்று சொல்லலாம்.
கடந்த 2001-ம் ஆண்டு நடிகர் சரத்குமாரை திருமணம் செய்துகொண்ட ராதிகாவுக்கு ஒரு மகன் உள்ள நிலையில், தற்போது சினிமாவில், முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகிறார். அதேபோல் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து வரும் ராதிகா சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார். இதில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றில், எந்த படத்தையாவது பார்த்தால் கிரிஞ்சா இருக்குனு யாருக்காவது தோணிருக்கா? இந்த படத்தை பார்க்கும்போது வாமிட் வரும் அளவுக்கு கோபம் வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார். ராதிகா எந்த படத்தை குறிப்பிடுகிறார் என்று ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தாலும், நெட்டிசன்கள் பலரும் அவர், இந்தியில் வெளியான அனிமல், மற்றும் ஹனுமான் ஆகிய படங்களை குறிப்பிடுவதாக கூறி வருகின்றனர்.