கர்ப்பமாக இருக்கும்போது மலை மீது ஏறி யோகா… கணவருடன் விடுமுறையைக் கொண்டாடும் அமலா பால்!

டிகை அமலா பால் கர்ப்பமாக இருக்கும் நிலையில், மலை மீது ஏறி யோகாசனம் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

தனது கணவருடன் விடுமுறையைக் கொண்டாடிவரும் அமலா பால், இன்ஸ்டாவில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் விஜய், தனுஷ், விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகை அமலா பால். அவர் தமிழ் சினிமாவில் அறிமுகமான சிந்துசமவெளி படம் தொடங்கி ஆடை படம் வரை சர்ச்சைகளுடனே வலம் வருபவர். தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல், மலையாள சினிமாவிலும் நடித்து வருகிறார்.

நடிகை அமலா பால், கடந்த ஆண்டு நவம்பரில் ஜெகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் அமலா பால், தனது கணவருடனான மகிழ்ச்சியான தருணங்களை இன்ஸ்டாகிராமில் புகைபடங்களாகவும் வீடியோக்களாகவும் பகிர்ந்து ரசிகர்களுக்கு ட்ரீட் வைத்து வருகிறார்.

அண்மையில், தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்த நடிகை அமலா பால், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார். அமலா பால் விடுமுறையை தனது கணவருடன் மகிழ்ச்சியாகக் கொண்டாடிவருகிறார்.

கர்ப்பாமாக இருக்கும் நடிகை அமலா பால் உயரமான மலை மீது ஏறி பாறை ஒன்றில் யோகாசனம் செய்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *