DMK Vs BJP: ‘நிர்மலா சீதாராமன் வருகைக்கு காரணம் உதயநிதியா?’ டென்ஷன் ஆன வானதி

கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வெள்ள பாதிப்புக்கு மாநில அரசு கேட்காமலேயே மத்திய அரசு நிபுணர் குழுவை அனுப்பியது. ஒவ்வொரு முறையும் மக்கள் பாதிப்புக்குள்ளானது பிறகு மத்திய அரசின் மீது பழிபோடுவதையே வேலையாக மாநில அரசு செய்து கொண்டிருக்கிறது.

மத்திய அரசு பணம் தரவில்லை என்ற பிரச்னையை சொல்லும் மாநில அரசு, கூட்டணி பேச டெல்லிக்கு சென்றார்கள். பண அரசியலை விட்டுவிட்டு மக்கள் துயரங்களுக்கு பதில் தர வேண்டும்.

உதயநிதி ஸ்டாலின் கடந்த 4 நாட்களாக என்ன பேசிக்கொண்டிருக்கிறார் என்பதை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். ராணுவ ஹெலிகாப்டரை மத்திய அரசுதான் அனுப்பியது. தமிழ்நாட்டின் பிரச்னைகளுக்கும் வேதனைகளுக்கும் மத்திய அரசு உடனடி தீர்வை அளித்துள்ளது.

நிர்மலா சீதாராமன் பிரதமரை போல் செயல்படுவதாக திருமாவளவன் பேசி உள்ளது குறித்த கேள்விக்கு, எங்கள் கட்சியில்தான் குஜராத்திலே சாதாரண குடும்பத்தை சேர்ந்த, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒருவர் பிரதமர் ஆகி உள்ளார்.

இந்த கட்சியில்தான் யார் வேண்டுமானாலும் இந்த நாட்டின் உயர்ந்த பொறுப்புகளுக்கு வர முடியும் நம்பிக்கையை கொடுத்துள்ளோம். திருமாவளவன் கூட்டணி வைத்திருக்கும் திமுக, ஒரு பட்டியல் இனத்தை சேர்ந்தவரை முதலமைச்சராக்க ஒத்துக்கொள்ள முடியுமா?.

இரவு நேரத்தில் முதலமைச்சரை பிரதமர் சந்தித்தை விமர்சித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குறித்த கேள்விக்கு, கூட்டணி கூட்டத்திற்கு சென்ற முதலமைச்சர் பிரதமரை சந்திக்கிறார். புயல் வெள்ளம் இருக்கும்போது முதலமைச்சரை சந்திக்க வேண்டும் என பிரதமர் சந்தித்தார். திமுக தலைவர்கள் வட இந்திய மாநில மக்களை பற்றி தரக்குறைவாக பேசுவது இது முதல்முறை அல்ல. அவர்களின் எம்பி கோமூத்ரா மாநிலம் என்று கூறி மன்னிப்பு கேட்டுவிட்டு வந்தார்.

உதயநிதி ஸ்டாலினின் அழுத்தத்தால்தான் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தூத்துக்குடி வருவதாக சொல்லப்படுவது குறித்த கேள்விக்கு, உதயநிதி அழுத்தத்தால்தான் ஹெலிகாப்டர் அனுப்பினார்களா?; அவரின் அழுத்தத்தால்தான் உணவு பொருட்களை ராணுவம் தந்ததா?; என்ன பேச்சு இது என வானதி சீனிவாசன் கூறினார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *