8 பேர் போற மாருதி கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! எழுதி வெச்சுக்கங்க! இதுக்கு அப்புறமும் சேல்ஸ் பிச்சுக்க போகுது
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி இன்விக்டோ (Maruti Suzuki Invicto). இது டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் (Toyota Innova Hycross) அடிப்படையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ள ஒரு கார் ஆகும். கடந்த 2023ம் ஆண்டு ஜூலை மாதம்தான் மாருதி சுஸுகி இன்விக்டோ விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.
இது ஏற்கனவே மிகவும் விலை உயர்ந்த ஒரு காராக உள்ளது. இந்த சூழலில், மாருதி சுஸுகி இன்விக்டோ கார் தற்போது அதிரடியான விலை உயர்வை (Price Hike) சந்தித்துள்ளது. மாருதி சுஸுகி இன்விக்டோ கார் மொத்தம் 2 வேரியண்ட்களில் (Variants) விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவை ஜெட்டா ப்ளஸ் (Zeta Plus) மற்றும் ஆல்பா ப்ளஸ் (Alpha Plus) ஆகியவை ஆகும்.
இதில், ஜெட்டா ப்ளஸ் வேரியண்ட்டின் விலை 39,000 ரூபாய் உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் ஆல்பா ப்ளஸ் வேரியண்ட்டின் விலை 50 ஆயிரம் ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதுதவிர மிஸ்டிக் ஒயிட் கலர் ஆப்ஷன் வேண்டுமென்றால், நீங்கள் 9,500 ரூபாய் அதிகமாக செலுத்த வேண்டியது வரும்.
இதன் காரணமாக மாருதி சுஸுகி இன்விக்டோ காரின் ஆரம்ப விலை தற்போது 25.21 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 29.01 லட்ச ரூபாய் ஆகவும் உயர்ந்துள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். ஆன்-ரோடு விலை (On-Road Price) இன்னும் கூடுதலாக வரும்.
மாருதி சுஸுகி இன்விக்டோ காரில், 2.0 லிட்டர் ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் இ-சிவிடி கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் ஒரு லிட்டருக்கு 23.24 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மாருதி சுஸுகி இன்விக்டோ கார் 7 சீட்டர் மற்றும் 8 சீட்டர் ஆகிய ஆப்ஷன்களில் கிடைக்கிறது. வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே கனெக்ட்டிவிட்டி வசதியுடன் கூடிய 10.1 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மாருதி சுஸுகி இன்விக்டோ காரின் முக்கியமான வசதிகளில் ஒன்றாகும்.
இதுதவிர 7 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 50க்கும் மேற்பட்ட சுஸுகி கனெக்ட் வசதிகள், 360 டிகிரி கேமரா, பனரோமிக் சன்ரூஃப், ட்யூயல் ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல், முன் பகுதியில் வென்டிலேட்டட் இருக்கைகள் போன்றவையும் மாருதி சுஸுகி இன்விக்டோ காரின் மிக முக்கியமான வசதிகள் ஆகும்.
மேலும் 6 ஏர்பேக்குகள், ஏபிஎஸ், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், ஹில் ஸ்டார்ட் அஸிஸ்ட் மற்றும் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் ஆகிய வசதிகளும், மாருதி சுஸுகி இன்விக்டோ காரில் கொடுக்கப்பட்டுள்ளன. எனவே வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாகவே மாருதி சுஸுகி இன்விக்டோ கார் கருதப்படுகிறது.