விலை இவ்வளவு கம்மியா? டாடா அல்ட்ராஸ் இவி காரை ஏழைகளும் வாங்கலாம் போல!
டாடா நிறுவனம் தனது அடுத்த எலெக்ட்ரிக் காராக அல்ட்ராஸ் என்ற இவி காரை களம் இறக்க தயாராக உள்ளது இந்நிறுவனம் அல்ட்ராஸ் காரின் வெற்றிக்குப் பிறகு அதை எலெக்ட்ரிக் வெர்ஷனாக மாற்ற நினைத்து தற்போது அதை வெற்றிகரமாக செய்துள்ளது. இந்த டாடா அல்ட்ராஸ் இவிகார் குறித்த விரிவான விபரங்கள் அனைத்தையும் காணலாம் வாருங்கள்.
டாடா நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பில் இறங்கிய போது தனது பெட்ரோல் வாகனங்களை எல்லாம் எலெக்ட்ரிக் வெர்ஷனாக மாற்ற வேண்டும் என்ற முடிவை எடுத்தது. முதன்முதலாக நெக்ஸான் காரின் எலக்ட்ரிக் வெர்ஷனை வெளியிட்டு அது மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற நிலையில் அடுத்தடுத்த கார்களை களம் இறக்க தயாராகி வந்தது. டாடா நிறுவனத்தின் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற கார் இந்த அல்ட்ராஸ்.
இந்த அல்ட்ராஸ் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை உருவாக்க டாடா நிறுவனம் கடந்த 2019 ஆம் ஆண்டு முயற்சி செய்தது. ஆனால் இதில் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை என்றால் இதில் உள்ள பேட்டரி பேக்கேஜை பொருத்துவது தான். இந்த காரில் பேட்டரி பேக்கேஜை பொருத்தினால் கிரவுண்ட் கிளியரன்ஸ் குறைகிறது. இதனால் காரின் உயர்த்த ஏற்றினால் காரின் லு ஹேட்ச்பேக் லுக்கிலிருந்து கிராஸ் ஓவர் லுக்கிற்க்கு மாறுகிறது.
இதனால் டாடா நிறுவனம் இந்த அல்ட்ராஸ் காரின் இவி வெர்ஷனை நெக்ஸான் காருக்கு அடுத்தபடியாக அறிமுகப்படுத்தலாம் என்று நினைத்திருந்த எண்ணத்தை மாற்றியது. தனது கவனத்தை அடுத்தடுத்த கார்களில் கொண்டு சென்றது. அதன் பின் டாடா டியாகோ இவி, டிகோர் இவி சமீபத்தில் டாடா பஞ்ச் இவி கார்கள் எல்லாம் வந்தன.அல்ட்ராஸ் இவி கார் குறித்த பேச்சு எதுவும்ம் சமீப நாட்களாக இல்லாமல் இருந்தது.
இந்நிலையில் டாடா நிறுவனம் இந்த அல்ட்ராஸ் இவி காரை கொண்டுவர புதிதாக ஒரு தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து விட்டதாக தெரிகிறது. டாடா பஞ்ச் இவி கார் தயாரிக்கப்பட்ட அதே ஆக்டி.இவி என்ற பிளாட்பார்மில் இந்த அல்ட்ராஸ் இவி காரையும் தயாரித்து சரியான கிரவுண்ட் கிளியரன்ஸுடன் காரின் உயரமும் அதிகமாகாமல் ஒரு சிறந்த எலெக்ட்ரிக் காராக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான பணிகளில் டாடா நிறுவனம் தற்போது இறங்கியுள்ளது. டாடா பஞ்ச் இவி கார் தயாரிக்கப்பட்ட அதே பிளாட்பார்மில் இந்த கார் தயாரிக்கப்படுவதால் கிட்டத்தட்ட அதே பேட்டரி பேக் தான் இந்த காரிலும் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது 25 கிலோ வாட் அவர் பேட்டரி பேக் கொண்ட கார் 315 கிலோமீட்டர் ரேஞ்ச் பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் 82 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் வகையில் கொண்ட மோட்டார் செட்டப்புடன் ஒரு வேரியன்டும், 35 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் கொண்ட கார், 421 கிலோமீட்டர் ரேஞ்ச் தரும் வகையில் 122 எச்பி பவர் கொண்ட மோட்டார் செட்டப் உடன் ஒரு வேரியன்டும் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
இந்தக் காரின் விலையை பொருத்தவரை மார்க்கெட்டில் ரூபாய் 10.99 லட்சம் முதல் ரூபாய் 15.49 லட்சம் என்ற விலையில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விளையும் கிட்டத்தட்ட டாடா பஞ்ச் காரின் விலை தான் என்றாலும் இந்த இரு கார்களுக்கும் தனித்தனியான வாடிக்கையாளர்கள் இருப்பதால் இரு தரப்பு வாடிக்கையாளர்களையும் கவரும் வகையில் ஒரே விலை ரேஞ்சில் வேறு வேறு கார்களை அந்நிறுவனம் வெளியிடுகிறது.
இந்த டாடா அல்ட்ராஸ் இவி கார் பெட்ரோல் கார் போல பிரீமியம் வம்சங்கள் நிறைந்த காராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரின் உட்புறத்திலும் சரி இதன் லுக்கும் சரி அனைத்தும் பிரிமியம் அம்சங்கள் அதிகம் நிறைந்த காராக இருக்கும் என எதிர்பார்க்கலாம். முக்கியமாக பெட்ரோல் காரில் இருக்கும் அதே அம்சங்கள் இபி காரிலும் இடம் பெற அதிக வாய்ப்புகள் உள்ளன.
டாடா நிறுவனம் தொடர்ந்து எலெக்ட்ரிக் வாகன விற்பனையில் கவனம் செலுத்தி வருகிறது. எலக்ட்ரிக் வாகனங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. தற்போது வரை எலெக்ட்ரிக் கார் விற்பனையில் டாடா நிறுவனம் தான் நம்பர் 1 இடத்தில் இருக்கிறது. இந்தியாவிலேயே அதிகமான எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் தொடர்ந்து வளர்ச்சி பெறுவது மிகப்பெரிய எதிர்காலத்தை இந்நிறுவனத்திற்கு வழங்க உள்ளது.