Skin Care : நோ… இந்த பழக்கங்கள உடனே விடுங்க! இல்லாவிட்டால் வயோதிக தோற்றம் ஏற்படும்!
சில வாழ்வியல் மாற்றங்கள் சிறு வயதிலேயே வயோதிக தோற்றத்தை கொண்டுவரும். வயதாவதையும் விரைவாக்கும். வயோதிகத்தை ஏற்படுத்தும் பழக்கங்கள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
புகைப்பழக்கம்
வயோதிகத்தை அதிகப்படுத்துவதில் புகைப்பிடித்தல் பழக்கம் அதிகம் பங்களிக்கக்கூடியதாகும். இது கொலஜென் மற்றும் எலஸ்டினை சேதப்படுத்தி சருமத்தில் சுருக்கங்கள் தோன்றுவதற்கும், சருமம் தொங்கிப்போவதற்கும் வழிவகுக்கிறது. புகைப்பிடித்தல் ரத்த நாளங்களை சுருக்குகிறது. இதனால் ரத்த ஓட்டம் குறைகிறது. சருமத்துக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போகிறது.
அதிக நேரம் வெயிலில் இருப்பது
எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் வெயிலில் அதிக நேரம் இருப்பது வயோதிகத்தை விரைவாக்குகிறது. வெயிலின் புறஊதா கதிர்கள் சருமத்தின் கொலஜென் மற்றும் எலஸ்டின் ஆகியவற்றை சேதப்படுத்துகிறது. முகத்தில் சுருக்கம் ஏற்படுவது, வயதான தோற்றம் ஆகியவை ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிவிடும். இதனால் சரும புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு.
சுகாதாரமற்ற உணவு
பதப்படுத்தப்பட்ட உணவு, சர்க்கரை, ஆரோக்கியமற்ற கொழுப்பு ஆகியவை அழற்சி மற்றும் மனஅழுத்தத்துக்கு வழிவகுக்கிறது. இதுவும் வயோதிகத்துக்கு காரணமாகிறது. காய்கறிகள் மற்றும் பழங்களில் இருந்து கிடைக்கக்கூடிய முக்கிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போவதும், சரும ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தி, விரைவில் வயோதிக தோற்றத்துக்கு வழிவகுக்கிறது.
குறைவான உறக்கம்
குறைவான தூக்கம் அல்லது தரமில்லாத தூக்கம் ஆகியவற்றால் உடல் கடுமையாக பாதிக்கப்படும். இதனால் உடல் செல்களை சரிசெய்து, புதிய செல்களை உற்பத்தி செய்ய முடியாமல் போகிறது. நீண்ட கால தூக்கப்பிரச்னைகள், வயோதிகத்தை முன்னதாகவே கொண்டுவந்துவிடும். கண்ணில் கருவளையம் ஏற்படுவது, சருமம் பாதிக்கப்படுவது, சுருக்கங்கள் ஏற்படுவது என பல சரும பிரச்னைகளையும் கொண்டுவருகிறது.
அதிகப்படியான மதுப்பழக்கம்
அதிகப்படியான மதுப்பழக்கம் சருமத்தில் ஈரத்தன்மையை போக்குகிறது. சருமத்தை வறட்சியாக்குகிறது. சுருக்கத்தை குறைக்கிறது. மதுவில் உள்ள அழற்சியை ஏற்படுத்தும் தன்மை உடலில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. சிறுவயதிலே வயதான தோற்றம் ஏற்படுவதற்கும் மதுப்பழக்கம் காரணமாகிறது.
மன அழுத்தம்
நாள்பட்ட மனஅழுத்தம் கார்ட்டிசால் போன்ற ஹார்மோன்களை வெளியிடுகிறது. அதுவும் வயோதிகத்தை விரைவாக்குகிறது. மனஅழுத்தம் காரணமாக தவறான வாழ்க்கை முறை பழக்கங்கள் ஏற்படுகிறது. இதனால் தூக்கமின்மை, சுகாதாரமற்ற உணவுப்பழக்கம் ஆகியவை ஏற்படுகிறது. இதனாலும் வயோதிகம் விரைவில் ஏற்படுகிறது.
உடற்பயிற்சி குறைவு
உடல் உழைப்பு இல்லாத, உட்கார்ந்தே இருக்கக்கூடிய வாழ்க்கை முறையால் தசைகளில் இழப்பு ஏற்படுகிறது. எலும்பு ஆரோக்கியம் குறைகிறது. சருமத்தின் நெகிழ்தன்மை குறைகிறது. வழக்கமான உடற்பயிற்சிகள் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. அது ஊட்டச்சத்துக்களை வெளியிடுவதற்கு முக்கியம். உங்கள் சருமத்துக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கி, இளமை தோற்றத்தை பராமரிக்க உதவுகிறது.
போதிய நீர்ச்சத்தின்மை
போதியஅளவு நீர்ச்சத்து இல்லாததால், உங்கள் சருமம் வறண்டு, பொலிவிழந்து காணப்படும். எனவே தேவையான அளவு தண்ணீர் பருகுவது மிகவும் முக்கியம். மேலும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்குமே சருமம் நீர்ச்சத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.
சரும பாதிப்பை மேற்கொள்ளாமல் இருப்பது
முறையான சருமபராமரிப்பு இல்லாமல் இருப்பது, கிளன்சிங், மாய்சரைசிங், சன் புரொடன்சன் ஆகியவற்றை முறையாக கடைபிடிக்க வேண்டும். இதுவும் வயோதிகத்தை முன்னரே ஏற்படுத்த காரணமாகிறது. வழக்கமான சரும பராமரிப்பு சருமத்தை சுற்றுச்சூழல் சேதத்தில் இருந்து பாதுகாக்க உதவுகிறது. இவை சருமத்துக்கு இயற்கையாகவே ஊட்டமளிக்கிறது.
குப்புற படுத்து உறங்குவது
குப்புறப்படுத்து உறங்குவது உறக்கப்பிரச்னைகளை ஏற்படுத்தும். இதனால் முகத்தில் சுருக்கம், தூக்கமின்மை போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. முகத்தை தலையணையில் புதைத்து தூங்கும்போது உங்கள் சருமம் பாதிக்கப்படுகிறது.