ஓட்ட ஓட்ட திகட்டாத அனுபவம்.. ஹஸ்க்வர்னா 401 பைக்கை ஓட்டினா இப்படி ஒரு அனுபவம் கிடைக்குமா! ரைடு ரிவியூ விபரம்!
இரண்டு சக்கர வாகன உலகில் புரட்சியை ஏற்படுத்திய மோட்டார்சைக்கிள் மாடல்களில் ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிளன் 401 (Husqvarna Svartpilen 401)-ம் ஒன்றாகும். கர்ஜிக்கும் சைலென்சர், குரோம் பூச்சு அலங்காரம் என பலதரப்பட்ட சிறப்பம்சங்களால் அலங்கரிக்கப்பட்ட ஓர் தயாரிப்பே இந்த ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிளன் 401 ஆகும்.
இந்த பைக் முதன் முதலில் உலக அளவில் கடந்த 2018 ஆம் ஆண்டிலேயே வெளியீடு செய்தது, ஹஸ்க்வர்னா நிறுவனம். அதேவேளையில், இந்தியாவில் இரண்டு ஆண்டுகள் தாமதமானநிலையில் இந்தியாவில் அந்த பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. 2020 ஆம் ஆண்டிலேயே ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிளன் 401 விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டது.
இந்த பைக்கின் புதுப்பிக்கப்பட்ட வெர்ஷனே தற்போது இந்தியா வந்திருக்கின்றது. இந்த பைக்கையே ரைடு ரிவியூ செய்து பார்க்க எங்களுக்கு அண்மையில் அழைப்பு வந்தது. புனேவின் அழகிய சாலைகளில் வைத்து இதை ரிவியூ செய்து பார்த்தோம். அப்போது எங்களுக்கு இந்த வாகனம் குறித்து கிடைத்த ரைடு அனுபவத்தையே இந்த பதிவில் உங்களுக்காக விரிவாக தொகுத்து வழங்கி இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிளன் 401 பைக்கின் வடிவமைப்பு மற்றும் சிறப்பம்சங்கள் பற்றிய விபரம்: ஹஸ்க்வர்னா நிறுவனம் இந்த பைக்கை ஏதோ வழக்கமான பைக்குகளில் ஒன்றை போல் வடிவமைக்கவுமில்லை, தயாரிக்கவும் இல்லை என்பதை நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். பார்த்த உடனே கண்களையும், மனதையும் கவரக் கூடியதாகவே இந்த வாகனத்தை ஹஸ்க்வர்னா தயாரித்து இருக்கின்றது.
வழக்கமாக நியோ-ரெட்ரோ ஸ்கிராம்ப்ளர் (Neo-Retro Scrambler) வகை பைக் என்றால் மிகவும் பல்க்கியான தோற்றத்தில் இருக்கும். ஆனால், ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிளன் 401 மிகவும் கச்சிதமானதாகவும், க்ளீனான உருவ அமைப்பையும் கொண்டதாகக் காட்சியளிக்கின்றது. பைக்கின் டிரெல்லிஸ் ஃப்ரேம்கூட வெளியில் தெரியும் வகையில் அது வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது.
மேலும், இந்த பைக்கில் ஆஃப்-ரோடு மற்றும் ஆஃப்-ரோடுகளை சமாளிக்கும் வசதிக் கொண்ட டயர்களே வழங்கப்பட்டு இருக்கின்றன. இது எந்த மாதிரியான கரடு – முரடான சாலையாக இருந்தாலும் சமாளிக்கும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. பைக்கின் கவர்ச்சியான தோற்றத்திற்காகவும், ரெட்ரோ லுக்கிற்கும் வலுசேர்க்கும் விதமாக வட்ட வடிவ அணிகலன்கள் மற்றும் கருவிகள் சில வழங்கப்பட்டு இருக்கின்றன.
அதில் மிக முக்கியமானதாக எல்இடி ஹெட்லைட் இருக்கின்றது. மேலும், இதன் டேஷில் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டரும் வட்ட வடிவத்தில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இவை இளம் தலைமுறையினரைக் கட்டாயம் கவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, அன்டர்பெல்லி எக்சாஸ்ட் மற்றும் இளம் தலைமுறையினர் எதிர்பார்க்கும் மிக சிறந்த இயக்க அனுபவத்தை வழங்கும் டயர் ஆகியவையும் இந்த பைக்கில் இடம் பெற்றிருக்கின்றன.
மிக முக்கியமாக மெல்லிய இழை போன்று இருக்கும் இதன் எல்இடி இன்டிகேட்டர் லைட்டுகள் மனதை திருடக் கூடியவையாக இருக்கின்றன. பார்க்கதான் இவை மெல்லியதாக இருக்கும். டர்னிங்கை மிக துள்ளியமாக இவை குறிக்கும். இந்த ஒட்டுமொத்த லுக்கிற்கும் மேலும் அழகு சேர்க்கும் விதமாக இந்த பைக்கில் சிறிய விண்ட்ஸ்கிரீன் இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றது.
இந்த அமைப்பு பைக்கின் மாஸ்டர்பீஸ் என தாராளமாக கூறலாம். இத்துடன், 401 என்கிற எழுத்துகளும் இந்த பைக்கில் இடம் பெற்றிருக்கின்றன. இது அந்த பைக்கிற்கு இன்னும் வேற லெவல் கவர்ச்சியான தோற்றத்தை வழங்கும் வகையிலேயே கொடுக்கப்பட்டு இருக்கின்றது. மிகவும் பெரிய எழுத்துக்களால் இந்த எண்கள் ஃப்யூவல் டேங்கில் இடம் பெற்றிருக்கின்றன.
இந்த எழுத்தை இன்னும் ஹைலைட்டாக காட்ட வேண்டும் என்பதற்காக மஞ்சள் நிற கோடு பேட்ஜை சுற்றிலும் வழங்கி இருக்கின்றனர். இத்துடன் இந்த பைக்கில் நீளமான இருக்கை, பைக்கின் அழகை நீள செய்யும் வகையில் வழங்கப்பட்டு இருக்கின்றது. மேலும், பின் பக்கத்தில் பைக்கின் ரக்கட்டான லுக்கை பரைசாற்றும் விதமாக கிராப் ரெயில்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
பைக்கின் பக்கவாட்டு தோற்றம் மிகவும் முரட்டுத் தனமாகக் காட்சியளிக்கின்றது. இந்த லுக்கே அதன் போட்டியாளர்களுக்கு ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிளன் 401 மிக சிறந்த போட்டியாளன் என்பதை காண்பிக்கும் வகையில் இருக்கின்றது. அதேவேளையில், எளிமையான லுக்கைக் கொண்டதாகவும் இந்த பைக் உள்ளது. இதனால்தான் இந்த பைக் பலரின் பிரியமான டூ-வீலராக மாறும் என எதிர்பார்க்கின்றோம்.
எஞ்சின் மற்றும் அதன் திறன் பற்றிய விபரங்கள்: ஸ்வர்ட்பிளன் 401 பைக்கில் 399 சிசி திறன் கொண்ட எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது ஓர் சிங்கிள் சிலிண்டர் டிஓஎச்சி எஞ்சின் ஆகும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 45.6 பிஎச்பி பவரையும், 39 என்எம் டார்க்கையும் வெளியேற்றும்.
இந்த பைக்கில் 17 அங்குல வீலே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதில் பைரல்லி ஸ்கார்பியோன் ரேல்லி எஸ்டிஆர் வகை டயர்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த டயரே ஆஃப்-ரோடு மற்றும் ஆன்-ரோட என எதுவாக இருந்தாலும் களம் காணும் வசதியை ஸ்வர்ட்பிளன் 401 பைக்கிற்கு வழங்கி இருக்கின்றது.
இந்த பைக்கின் இருக்கை உயரம் 820 மிமீட்டர் ஆகும். அனைவராலும் அனுபவிக்க கூடிய உயரமே இதுவாகும். இதன் வீல்பேஸ் 1,354 மிமீ ஆகும். மேலும், இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் 177 மிமீட்டராக இருக்கின்றது. இந்த அதிக கிரவுண்ட் கிளியரன்ஸே இந்த பைக்கை அனைத்து விதமான சாலையையும் சமாளிக்கும் திறன் கொண்டதாக மாற்றி இருக்கின்றது.
மிக முக்கியமாக பின்பக்க சக்கரம் லாக்-ஆகுவதை அது தடுக்கின்றது. இதனால் ஸ்லிப் ஆகும் என்ற பேச்சுக்கே இடமிருக்காது. ஒட்டுமொத்தத்தில் இந்த பைக்கில் ரைடு செய்தபோது மிக சிறந்த அனுபவமே எங்களுக்கு கிடைத்தது. மிகவும் மோசமானதாகவும் அது இல்லை. அதேவேளையில் மிகவும் பின் தங்கியதாகவும் அந்த வாகனம் இல்லை. குறிப்பாக, டேங்குடன் இணைந்தவாறு இருக்கும் இருக்கை அமைப்பு ரைடை என்ஜாய் செய்து மேற்கொள்ள உதவியாக இருக்கின்றது.