செல்லூர் ராஜூ போனில் அழைத்தார்.. எதிரெதிர் அரசியல் முகாம்களில் இருந்தாலும்.. நெகிழ்ந்த மதுரை எம்.பி!

துரை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மதுரை எம்.பி சு.வெங்கடேசனை போனில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு.

 

மதுரை வண்டியூரில் தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதம் வெகு விமர்சையாக தெப்பக்குள திருவிழா நடைபெறும். தை மாத பௌர்ணமி நாளன்று தெப்பக்குளம் மாரியம்மன் திருவிழா நடைபெறும். அப்போது மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நடை சாத்தப்பட்டு, தெப்பக்குளத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

இந்த ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி திருவிழா தொடங்கி, ஜனவரி 25ஆம் தேதி விழா உற்சவமான தெப்பக்குள தேர் இழுக்கும் நிகழ்வு நடைபெற்று முடிந்தது. திருவிழாவை முன்னிட்டு தெப்பக்குளத்தை சுற்றிலும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. இந்த வண்ண விளக்குகளில் தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் கூடுதல் அழகுடன் மிளிர்ந்தது.

மேலும், மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், தெப்பக்குளம் பகுதியில் உயர் கோபுர மின் விளக்குகளும் அமைக்கப்பட்டன. இதில் ஒளி வெள்ளத்தில் மின்னியது தெப்பக்குளம். இதனால் பக்தர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலை காணக் குவிந்து, கண்டு ரசித்தனர்.

இந்நிலையில், வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தை சுற்றி உயர்மின் கோபுரம் அமைத்துள்ளது குறித்து சு.வெங்கடேசனுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பாராட்டு தெரிவித்துள்ளார். இதனை, தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து நன்றி தெரிவித்துள்ளார் சு.வெங்கடேசன். எதிர் கட்சி எம்.பியை அதிமுக முன்னாள் அமைச்சர் பாராட்டியுள்ளது கவனம் பெற்றுள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *