இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் மீதான தடையை நீக்கிய ஐசிசி!
இதையடுத்து ஐசிசி இலங்கை கிரிக்கெட் வாரியம் மீது தற்காலிக தடையை விதித்தது. இது சம்மந்தமான செய்திக் குறிப்பில் “இலங்கை கிரிக்கெட் வாரிய விவகாரங்கள் தன்னாட்சி முறையில் நிர்வகிக்கப்பட வேண்டும். இலங்கை கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தில் அரசின் தலையீடு இல்லை என்பதை அந்த நாட்டு கிரிக்கெட் போர்டு உறுதிப்படுத்த வேண்டும்” எனக் கூறியிருந்தது.
இந்நிலையில் இப்போது இலங்கை கிரிக்கெட் வாரியம் மீதான தடையை நீக்கியுள்ளது ஐசிசி. இந்த தடை நீக்கம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் ஐசிசி தெரிவித்துள்ளது.