“தோனி பாய் தேவைதான்.. ஆனால் அவர் செய்தது போதும் ஓய்வெடுக்கட்டும்” – தீபக் சகர் பரபரப்பு பேச்சு
இதற்கு இரண்டு முக்கிய காரணம் தோனி மிகவும் எளிமையான பழக்கவழக்கங்களைக் கொண்டவர். எல்லோரையும் சமமாக நடத்தக்கூடியவர். அதே சமயத்தில் அவர் கிரிக்கெட் குறித்து எளிமையான தெளிந்த புரிதலை வைத்திருப்பவர். எனவே அவரிடம் நேரம் செலவிடுவது கிரிக்கெட் வீரர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு விஷயம்.
இதில் மிகவும் அதிர்ஷ்டசாலி கிரிக்கெட் வீரர் யார் என்றால் இந்தியா மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் தீபக் சகர்தான். இவர் மேல் தோனிக்கு தனிப்பட்ட முறையில் நிறைய பாசம் இருக்கிறது. தன் மகளுக்கு என்ன அறிவு இருக்குமோ அதுதான் தீபக் சகருக்கும் இருக்கும் என்கின்ற அளவுக்கு அவர் மேல் பிரியமாகத் தோனி இருக்கக்கூடியவர்.
மேலும் தோனி கிண்டல் கேலிகள் செய்து விளையாடக்கூடிய ஒரு இளம் வீரராக தீபக் சகர் மட்டும்தான் இருக்கிறார். விளையாட்டு நேரங்களில் விமான பயணத்தில் நிறைய நேரங்களில் அவர் மகேந்திர சிங் தோனி உடன் இருப்பதை பார்க்க முடியும்.
மகேந்திர சிங் தோனி உடனான நட்பு குறித்து பேசி உள்ள தீபக் சகர் கூறும் பொழுது “அவருடன் நான் இயல்பாக மாற எனக்கு இரண்டு மூன்று வருடங்கள் தேவைப்பட்டது. நான் அவரை என்னுடைய மூத்த அண்ணனாக பார்க்கிறேன். அவரும் என்னை தம்பியாக பார்ப்பார் என்று நம்புகிறேன். எங்களுக்கு வேடிக்கையான தருணங்கள் நிறைய இருக்கிறது.
கோவிட் நேரத்தில் நாங்கள் இருவரும் சேர்ந்து பப்ஜி விளையாடிக் கொண்டிருந்தோம். மேலும் நாங்கள் நிறைய விளையாட்டுகளை சேர்ந்து விளையாடி இருக்கிறோம். களத்திற்கு வெளியே நிறைய நேரம் செலவு செய்திருக்கிறோம். அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டதில் நான் அதிர்ஷ்டசாலி.