உங்களுக்கு வெட்கமா இல்லையா ஹர்திக்? ஷமர் ஜோசப்பை பார்த்து திருந்துங்க.. வம்பிழுக்கும் ரோகித் பேன்ஸ்

ஐதராபாத் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று வரலாற்று சாதனையை படைத்திருக்கிறது.

ஆஸ்திரேலிய மண்ணில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு டெஸ்ட் போட்டியை வெஸ்ட் இண்டீஸ் அணி வென்றிருக்கிறது.

இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் சமர் ஜோசப் இரண்டாவது இன்னிங்ஸில் ஏழு விக்கெட்டுகளை கைப்பற்றி அணிக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்திருக்கிறார். ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்யும்போது ஸ்டார்க் வீசிய பந்து சமர் ஜோசப்பின் காலை பதம் பார்த்தது.

இதனால் அவர் நடக்க முடியாமல் பெவிலியன் சென்றார். இரண்டாவது இன்னிங்ஸில் பந்து வீச வரவில்லை. எனினும் அணிக்கு தான் தேவை என்பதை உணர்ந்த ஷமர் ஜோசப், தன் கால் எப்படி போனாலும் பரவாயில்லை. நான் பந்து வீச தயாராக இருக்கிறேன் என்று கேப்டனிடம் கூறியிருக்கிறார். மேலும் கடைசி விக்கெட் விழும் வரை நான் தொடர்ந்து பந்து வீச என்னை அனுமதிக்க வேண்டும் என்றும் கேப்டனிடம் மன்றாடி இருக்கிறார்.

தான் சொன்னது போல் ஷமர் ஜோசப் செய்தும் காட்டி இருக்கிறார். இதனால் தான் ஷமர் ஜோசப் சூப்பர் ஹீரோவாக கிரிக்கெட் ரசிகர்களால் பார்க்கப்படுகிறார். இந்த நிலையில் ஷமர் ஜோசப்பை ஒப்பிட்டு ஹர்திக் பாண்டியாவை ரோகித் ரசிகர்கள் கடுமையாக கிண்டல் செய்து வருகிறார்கள். உலக கோப்பை தொடரில் வங்கதேசத்துக்கு எதிராக ஹர்திக் பாண்டியா விளையாடிய போது காலில் காயம் ஏற்பட்டு போட்டியிலிருந்து பாதியில் விலகினார்.

இதை வைத்து தான் தற்போது ரோகித் ரசிகர்கள் ஹர்திக் பாண்டியாவை வெளுத்து வாங்கி வருகிறார்கள். ஒரு இளம் வீரர் காலில் அடிபட்டு அதனை கண்டு கொள்ளாமல் அணியின் வெற்றிக்காக ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். ஆனால் ஹர்திக் பாண்டியா காலில் அடிப்பட்ட பிறகு உலக கோப்பை தொடரிலிருந்து விலகிவிட்டார். அவர் காயத்தை பெரிதாக பொருட்படுத்தாமல் வலி நிவாரண மருந்துகளை எடுத்துக்கொண்டு உலகக்கோப்பை தொடர் முழுவதும் விளையாடி இருந்தால் இந்திய அணி கோப்பையை வென்றிருக்கும்.

ஆனால் ஹர்திக் பாண்டியா தமது உடல் தகுதியை காரணம் காட்டி எந்த போட்டியிலும் விளையாடவில்லை. குறைந்தபட்சம் மூன்று போட்டிகளில் ஓய்வு எடுத்துக்கொண்டு அரை இறுதிக்கு முன்பாவது இந்திய அணிக்கு திரும்பிருக்கலாம் என்று ரோகித் ரசிகர்கள் புகார் தெரிவித்திருக்கிறார்கள். இது மட்டுமல்லாமல் ஹர்திக் பாண்டியா ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும் என்பதற்காக தான் உலகக் கோப்பை போட்டியில் காயத்தை காட்டி பாதியில் விலகி விட்டதாகவும் ரோகித் ரசிகர்கள் சாடி இருக்கிறார்கள்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *