ஆதார் கார்டு ஓகே.. அதென்ன e-Aadhaar card..? முதல்ல இதை தெரிஞ்சிக்கோங்க..!
இ-ஆதார் கார்டு என்பது ஆதார் கார்டின் டிஜிட்டல் வடிவமாகும். இதை பல்வேறு அரசு திட்டங்களுக்கு விவரங்கள் சரிபார்ப்பதற்கு பயன்படும்.
காஆதார் அட்டையைப் போலவே, பயோமெட்ரிக் தரவு, மக்கள்தொகை விவரங்கள், ஆதார் எண் மற்றும் புகைப்படம் போன்ற அத்தியாவசியத் தகவல்களும், உங்கள் பெயர், பிறந்த தேதி மற்றும் பாலினம் போன்ற பொதுவான தகவல்களும் இ-ஆதார் அட்டையில் அடங்கும். இ-ஆதார் கார்டு பெறுவது எப்படி என்பதை படிப்படியாக வழிமுறையில் தெரிந்துக்கொள்ளுங்கள்.
முதலில் ஆதார் UIDAI தளத்தில் உள்நுழைவதற்கு ஆதார் கார்டு பதிவு எண்களைத் தயாராக வைத்திருங்கள். உங்களிடம் ஆதார் அட்டை எண் இல்லை என்றால், உங்கள் பதிவு எண்ணுடன், ஒப்புகை சீட்டில் வழங்கப்பட்ட நேரம் மற்றும் தேதியுடன் தயாராக வைத்திருக்கலாம். உங்கள் இ-ஆதார் கார்டைப் பதிவிறக்கம் செய்வதற்கான சில வழிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. உங்கள் இ-ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்வதற்கான படிகள்: முதலில் https://myaadhaar.uidai.gov.in/retrieve-eid-uid?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH என்ற இணைதளத்திற்கு செல்லுங்கள். பின்னர் இந்தப் படிகளைப் பின்பற்றுங்க.
உங்கள் முழுப்பெயர், பதிவுசெய்யப்பட்ட மின்னஞ்சல் ஐடி/மொபைல் எண் மற்றும் பாதுகாப்புக் குறியீட்டை உள்ளிடவும்.’ஓடிபி அனுப்பு’ என்பதைக் கிளிக் செய்து, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் பெறப்பட்ட ஒருமுறை கடவுச்சொல்லைச் சமர்ப்பிக்கவும்.இப்போது, பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் அனுப்பப்பட்ட ஆதார் எண்/பதிவு ஐடியை சரிபார்க்கவும். Aadhar Misuse: உங்களது ஆதார் விவரங்களை துஷ்பிரயோகம் செய்வதை தவிர்ப்பது எப்படி? அதிகாரப்பூர்வ யுஐடிஏஐ இணையதளத்தில் இ-ஆதார் பக்கத்துக்குச் சென்று 28 இலக்க பதிவு ஐடி / 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிடவும்.
இப்போது, பாதுகாப்புக் குறியீட்டைச் சமர்ப்பித்து, ‘ஓடிபியை அனுப்பு’ என்பதைக் கிளிக் செய்யவும்.முடிவில், இந்த OTP ஐச் சமர்ப்பித்து, ‘சரிபார்த்து பதிவிறக்கம்’ என்பதைக் கிளிக் செய்த பிறகு நீங்கள் மின்-ஆதார் அட்டையைப் பதிவிறக்க முடியும். பதிவிறக்கம் செய்த பிறகு, ஆதார் அட்டையை அச்சிடலாம்.