கல்லீரலை காக்கும் 4 முக்கிய வைட்டமின்கள் என்ன.. எதுல இருக்கு.. இனிமே சாப்பிடுங்க!
உடலில் 500க்கு மேற்பட்ட பணிகளை செய்யும் வேலையை திறம்பட நடத்துகிறது கல்லீரல். உணவை ஜீரணிப்பது, குளுக்கோஸ் சேமிப்புக்கு,
உடலில் இருக்கும் நச்சுக்களை வடிகட்டுவது, வளர்சிதை மாற்ற செயல்பாடுகளை முறைப்படுத்துவது, புரத தொகுப்பை ஒழுங்குப்படுத்துவது என்று பல முக்கிய வேலைகளை செய்து வருகிறது. இந்த கல்லீரலின் ஆரோக்கியம் குன்றும் போது இவற்றால் அனைத்து வேலைகளையும் திறம்பட செய்ய முடியாது. இந்த கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துகொள்ள உதவும் வைட்டமின்கள் என்னென்ன என்பதை இப்போது தெரிந்துகொள்வோம்.
வைட்டமின் குறைபாடு நீண்ட காலம் இருந்தால் கல்லீரலில் பாதிப்பை உண்டு செய்யும்.
ஆய்வு ஒன்றின்படி சிரோசிஸ் நோயாளிகளுக்கு வைட்டமின் டி குறைபாடு உள்ளது என்று காட்டுகிறது. மேலும் முதன்மை பிலியரி சிரோசிஸ் காட்டிலும் ஆல்கஹால் கல்லீரல் ஈரல் அழற்சி உள்ள நோயாளிகளுக்கு இதன் அளவு கணிசமாக குறைக்கிறது.
கல்லீரல் இழைநார் வளர்ச்சியில் வரக்கூடிய ஹெபடைடிஸ், வைரஸ்கள் மற்றும் ஆல்கஹால் ஆகியவற்றால் ஏற்படும் சேதத்தை மாற்ற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் கல்லீரல் ஆரோக்கியம் மற்றும் குறைபாடுகளை சரிசெய்யும் வைட்டமின்களை அறிந்து வைத்திருப்பது அவசியம். அப்படி கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் முக்கிய வைட்டமின்கள் என்ன என்பதை இங்கு பார்க்கலாம்.
கல்லீரல் ஆரோக்கியத்துக்கு வைட்டமின் டி
வைட்டமின் டி அத்தியாவசிய ஊட்டச்சத்து. ஆரோக்கியமான எலும்புகளுக்கும் கால்சியம் உறிஞ்சுவதற்கும் மற்றும் தாது வளர்சிதை மாற்றத்துக்கும் மட்டும் அல்ல கல்லீரல் ஆரோக்கியத்துக்கும் இவை நன்மை செய்யும்.
கல்லீரல் ஆரோக்கியம் விரும்பினால் இன்சுலின் மற்றும் இரத்த சர்க்கரை கட்டுப்பாடுகளிலும் கவனம் தேவை. ஏனெனில் கல்லீரல் நோயுடன் போராடும் பலாருக்கும் வைட்டமின் டி குறைபாடு இருப்பதாக ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.
வைட்டமின் டி எப்படி பெறுவது
சூரிய ஒளி மூலம் இயற்கையாக வைட்டமின் டி பெற முடியும். வீட்டிற்குள் இருப்பவர்களுக்கு வைட்டமின் டி உணவுகள் மற்றும் சப்ளிமெண்ட்ஸ் உதவியாக இருக்கும்.
சால்மன் மீன், மத்தி, முட்டையின் மஞ்சள் கரு, சிவப்பு இறைச்சி, விலங்குகளின் கல்லீரல், பால், காளான் போன்றவற்றில் வைட்டமின் டி உள்ளன.
கல்லீரல் ஆரோக்கியத்துக்கு வைட்டமின் ஈ
வைட்டமின் ஈ என்பது 8 கொழுப்பில் கரையக்கூடிய சேர்மங்களின் குழு. இது சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றத்தை உருவாக்குகிறது. ஃப்ரீ ரேடிக்கல்களால் உண்டாககூடிய ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தின் எதிர்வினைகளை உடைக்க செய்யும். கல்லீரல் ஆரோக்கியத்தில் ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் மற்றும் ஆல்கஹாலிக் அல்லாத ஸ்டீட்டோஹெபடைடிஸ் உள்ளவர்கள் வைட்டமின் ஈ குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர். ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் செல்களை பாதிக்கலாம்.
2014 ஆம் ஆண்டு ஆய்வு ஒன்றின்படி 96 வாரங்களுக்கு மேல் வைட்டமின் ஈ எடுத்துக்கொண்ட நபர்கள் கல்லீரலில் வீக்கம் மற்றும் கொழுப்பு அளவை குறைத்துள்ளனர். நீண்ட காலம் வைட்டமின் ஈ எடுத்து கொள்வது கல்லீரல் உயிரணு இறப்பை குறைக்க உதவியது என்பதை ஆய்வு காட்டியது.
வைட்டமின் ஈ எப்படி பெறுவது
ஆலிவ் எண்ணெய், பாதாம் , சூரியகாந்தி விதைகள், இறைச்சிகள், கோழி, அவகேடோ, வேர்க்கடலை , பால், இலை கீரைகள் மற்றும் பலப்படுத்தப்பட்ட தானியங்கள், சோயா, ஆலிவ் ஆயில், கொட்டைகள் போன்றவற்றில் உள்ளன.
கல்லீரல் ஆரோக்கியத்துக்கு வைட்டமின் சி
வைட்டமின் சி ஒரு ஆக்ஸிஜனேற்றியாகும். இது ஃப்ரீ ரேடிக்கல்கள், நச்சு இராசயனங்கள் மற்றும் மாசுபாட்டிலிருந்து சாத்தியமான ஆக்ஸிஜனேற்ற சேதத்தை காக்க செய்யும். இது குணப்படுத்துதல், நோயெதிர்ப்பு செயல்பாடு, சைனஸ் மற்றும் நுரையீரல் பிரச்சனைகளை கட்டுப்படுத்த செய்கிறது. கல்லீரலில் கொழுப்பு வளர்சிதை மாற்றத்துக்கு ஆதரவை வழங்க செய்கிறது. வைட்டமின் சி கொழுப்பு திரட்சியைக் கட்டுப்படுத்துவதன் மூலம் கல்லீரல் ஆரோக்கியத்தை ஆதரிக்க உதவுகிறது. கொழுப்பு கல்லீரல் நோய் எனப்படும் பொதுவான நிலையை தடுக்கவும் செய்கிறது.Recommended Dietary Allowance (RDA) கூற்றுப்படி தினசரி அளவில் ஆண்களுக்கு 75 mg அளவும் பெண்களுக்கு 90mg அளவும் தேவை.
வைட்டமின் சி எப்படி பெறுவது
சிட்ரஸ் பழங்கள், ஸ்ட்ராபெர்ரிகள், தக்காளி, ப்ரக்கோலி, குடைமிளகாய், வெள்ளை உருளைக்கிழங்கு போன்றவற்றில் உள்ளன.
கல்லீரல் ஆரோக்கியத்துக்கு வைட்டமின் பி
வைட்டமின் பி என்பது வளர்சிதை மாற்ற செயல்முறைகளுக்கு அவசியமானது. வைட்டமின் பி என்பது குழுமம் ஆகும். 8 வைட்டமின்கள் அடங்கிய குழு இது. பெரும்பாலானவை உடலில் சேமித்து வைக்க முடியாது. கல்லீரல் ஆரோக்கியத்தில் கல்லீரலின் நச்சுத்தன்மை செயல்முறைகளுக்கு வைட்டமின் பி தேவைப்படுகின்றன. கல்லீரல் நச்சு நீக்கத்தில் வைட்டமின் பி12, பி6 மற்றும் ஃபோலேட் தேவைப்படுகின்றன. வைட்டமின் பி6 ஆனது குளுதாதயோன் உற்பத்திக்கு தேவைப்படுகிறது.
வைட்டமின் பி குழுமம் எப்படி பெறுவது
வைட்டமின் பி12 விலங்கு மூலங்களிலிருந்து மட்டுமே கிடைக்க கூடியது. இனிப்பு சேர்க்காத தாவர பால்கள், சோயா பொருள்கள், காலை உணவு தானியங்கள், பி12 போன்ற வைட்டமின் பி12 உடன் செறிவூட்டப்பட்ட உணவுகள், இலை கீரைகள், இறைச்சி, முழு தானியங்கள், கொண்டைக்கடலை, சிறுநீரக பீன்ஸ், காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்ற உணவுகளிலிருந்து இவை பெறலாம்.