ஹலோ ஜி ஜின்பிங், 2 பில்லியன் கடன் கிடைக்குமா.. சீனாவிடம் கடன் கேட்டு நிற்கும் பாகிஸ்தான்..!
கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான் நிலைமையை சமாளிப்பதற்காக சீனாவிடமிருந்து 2 பில்லயன் டாலர்களை பாகிஸ்தான் கடனாகக் கேட்டுள்ளது.பாகிஸ்தானின் பிரதமர் அன்வாருல் ஹக் காக்கர் இது தொடர்பாக சீன அதிபர் லீ ஜியாங்குக்கு எழுதிய கடிதத்தில் 2 பில்லியன் டாலர்கள் கடன் அளிக்குமாறு கேட்டுள்ளார்.
மார்ச் 23 ஆம் தேதியன்று இந்த கடன் வந்து சேரும் எனத் தெரிகிறது. காக்கர் எழுதிய கடிதத்தில், சீனா முன்னர் அளித்த கடனுதவிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
அந்தக் கடன் மூலம் பாகிஸ்தானின் அந்நியச் செலவாணி இருப்பு ஸ்திரத்தன்மைக்கு வந்ததாகவும் வெளிநாட்டு கடன்களை திரும்பச் செலுத்துவதற்கு உதவியாக இருந்ததாகக் கூறியுள்ளார்.சீனாவிடம் இருந்து இதுவரை 4 பில்லியன் டாலர்களை பாகிஸ்தான் கடனாக வாங்கியுள்ளது. இந்த மாதத் தொடக்கத்தில் ஐக்கிய அரபு அமீரகமும் பாகிஸ்தானுக்கு 2 பில்லியன் டாலர்களை கடனாக வழங்கியது. அதேபோல் சவூதி அரேபியாவும் 5 பில்லியன் டாலர்களை ஸ்டேட் பாங்க் ஆப் பாகிஸ்தானில் கடனாக டெபாசிட் செய்தது.
இந்த நிலையில் பாகிஸ்தான் காபந்து (caretaker) அரசு சர்வதேச நிதியத்தை அணுகி 1.2 பில்லியன் கடனில் கடைசி தவணையைத் தருமாறு கேட்டுள்ளது.சர்வதேச நிதியத்தின் அடுத்த பணியானது, கடைசி கடன் தவணையைப் பெறுவதற்கும் புதிய நீண்ட கால திட்டத்துக்கான பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதற்கும் முக்கியமானது.முன்னாள் நிதி அமைச்சர் இஷாக் தார், அளித்த பேட்டி ஒன்றில் பேசுகையில், தனது கட்சியான பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் (பிஎம்எல்-என்) தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், புதிய ஐஎம்எஃப் திட்டம் குறித்து உடனடியாக முடிவெடுப்போம் என்று கூறினார்.
ஐஎம்எஃப் திட்டத்தில் நுழைய வேண்டாம் என்று தனது கட்சி முடிவு செய்தால், பெல்ட்டை இறுக்குவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக செயல்படுத்துவோம் என்றும் இஷாக் தார் குறிப்பிட்டுள்ளார்.பாகிஸ்தானின் நிதியுதவி குறித்த அதன் ஊழியர்கள் நிலை அறிக்கையில் ஐஎம்எஃப் சில மாற்றங்களைச் செய்துள்ளது. பட்ஜெட் ஆதரவு கடன்கள் $3 பில்லியனாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் திட்ட நிதி இந்த நிதியாண்டில் $3.7 பில்லியனாக குறைக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான்-ஐ விட்டு காலி செய்ய வேண்டியது தான்.. இனி நமக்கு வேலை இல்லை..!! நடப்புக் கணக்குப் பற்றாக்குறை கணிப்புகளில் சிறிய மாற்றங்களுடன், ஒட்டுமொத்த வெளிப்புற நிதித் தேவைகள் 25 பில்லியன் டாலருக்கும் கீழாகக் குறைக்கப்பட்டுள்ளன.பாகிஸ்தானின் பொருளாதார நிலைமை மோசமாக உள்ளது, நீண்ட காலம் தாமதமான கட்டமைப்பு சீர்திருத்தங்கள் இல்லாமல், அந்த நாடு குறிப்பிடத்தக்க அளவுக்கு நிதித் திவால் அபாயத்தை எதிர்கொள்கிறது.2023 ஆம் ஆண்டுக்குள் வெளி கடனாளிகளுக்கு செலுத்த வேண்டிய 125 பில்லியன் டாலர்கள் பாகிஸ்தானின் பொருளாதாரச் சிக்கல்களுக்கு முதன்மைக் காரணமாகும்.