முரண்டு பிடிக்கும் கூட்டணி கட்சிகள்… சிக்கலில் காங்கிரஸ்! – `இந்தியா’ கூட்டணிக்கு என்ன பாதிப்பு

மேற்கு வங்கத்தில் தனித்துப் போட்டி என்று மம்தா பானர்ஜியும், பஞ்சாப் மாநிலத்தில் தனித்துப் போட்டி என்று ஆம் ஆத்மி முதல்வர் பகவந்த் மானும் அதிரடி காட்டுகிறார்கள்.

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அணி மாறிவிட்டார். இதனால், ‘இந்தியா’ கூட்டணி திணறுகிறது என கொண்டாட்டத்தில் இருக்கிறது பா.ஜ.க முகாம்.

நிதிஷ் குமார்

‘பா.ஜ.க-வை மீண்டும் ஆட்சிக்கு வரவிடக் கூடாது’ என்ற ஒற்றை நோக்கத்துடன் ‘இந்தியா’ கூட்டணியை உருவாக்க முன்முயற்சியை மேற்கொண்ட நிதிஷ் குமாரே தங்கள் அணிக்கு வந்துவிட்டார் என்பதால் பா.ஜ.க தலைவர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

நிதிஷ் குமார் விலகலால் தங்கள் கூட்டணிக்கு பாதிப்பு இல்லை என்கிறார்கள் ‘இந்தியா’ கூட்டணித் தலைவர்கள். நிதிஷ் குமார் பா.ஜ.க அணிக்குத் தாவப்போகிறார் என்று செய்திகள் வந்துகொண்டிருந்த நேரத்தில், ‘பீகார் மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டார். அவர் விலகினால் பீகாரில் ஆர்.ஜே.டி தலைவர் தேஜஸ்வி யாதவ் எளிதாக செயல்படுவார்’ என்றார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.

மம்தா பானர்ஜி

அவ்வாறு மம்தா பானர்ஜி சொன்னது ஆச்சர்யமாக இருந்தது. ஏனெனில், நிதிஷ் குமார் பா.ஜ.க கூட்டணியில் சேருவதற்கு முன்பாகவே, ‘இந்தியா’ கூட்டணியின் இமேஜுக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருந்தார் மம்தா. ‘மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி கிடையாது. திரிணாமுல் காங்கிரஸ் தனித்தே போட்டியிடும்’ என்ற மம்தாவின் அதிரடி அறிவிப்பால் ‘இந்தியா’ கூட்டணியில் இருக்கும் பிற கட்சிகளின் தலைவர்களும், பா.ஜ.க தோற்கடிக்கப்பட வேண்டும் என்ற விருப்பம் கொண்ட மற்ற தரப்பினரும் அதிர்ச்சியடைந்திருந்தனர்.

தனக்கு எதிராக எல்லா எதிர்க் கட்சிகளும் ஓரணியில் திரளுகின்றன என்பதைப் பார்த்து ஆரம்பத்தில் பா.ஜ.க பயந்தது. பீகார் தலைநகர் பாட்னாவில் முதல் கூட்டமும், பெங்களூருவில் இரண்டாவது கூட்டமும், மும்பையில் மூன்றாவது கூட்டமும் நடத்தி, தங்கள் நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் வேகப்படுத்தியதைப் பார்த்து பா.ஜ.க-வின் அச்சம் மேலும் அதிகரித்தது என்று கூட சொல்லப்பட்டது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *