Shamar Joseph: “செக்யூரிட்டி முதல் வெஸ்ட் இண்டீஸின் ஹீரோ வரை” : யார் இந்த ஷமர் ஜோசப்?

செக்யூரிட்டியாக இருந்து இப்போது இப்படி ஒரு சாதனையை படைத்த அவரை பற்றிய ஒரு ஃப்ளாஷ்பேக். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அறிமுகமான மற்ற வீரர்களைப்போலத்தான் ஷமர் ஜோசப் முதலில் பார்க்கப்பட்டர். அதன்பின்னர் தான் தெரிந்தது இவர் சாதாரண வீரர் இல்லை சாதனை வீரர் என்று.முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இவர் எடுத்த முதல் விக்கெட்டே ஸ்மித்தின் விக்கெட்தான்.

ஸ்மித் ஓப்பனராக இறங்கிய முதல் போட்டியிலேயே ஷமரிடம் தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார். தொடர்ந்து ஸ்டார்க், லயான் ஆகியோர்களையும் முட்டி மோதி வீழ்த்தி அறிமுகப் போட்டியிலேயே அதிலும் ஆஸ்திரேலியாவில் வைத்து ஐந்து விக்கெட்டை வீழ்த்தினார் ஷமர். அதேபோல், முதல் இன்னிங்ஸில் 36 ரன்களை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எடுத்துக்கொடுத்தார்.

செக்யூரிட்டி முதல் வெஸ்ட் இண்டீஸின் மாஸ் ஹீரோ வரை..

முதல் போட்டியில் 20 ஓவர்கள் வீசிய இவர் 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். அதன் பின்னர் 2-வது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டார்க்கின் யார்க்கர் பந்துவீச்சு, ஷமர் ஜோசப்பின் காலை பதம் பார்த்தது. இதனால், அவர் தொடர்ந்து விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்த நிலையில், 2-வது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணியை வாரி சுருட்டினார். அதன்படி, 11 ஓவர்கள் மட்டுமே வீசி 68 ரன்களை விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினார்.

கரீபியனில் உள்ள பராகரா என்ற கிராமத்தில் பிறந்து கூலித்தொழிலாளியாக வேலையைத் தொடங்கியவர். பின்னர் செக்யூரிட்டியாக 12 மணி நேர ஷிஃப்டில் பணியாற்ற அங்கிருந்து கிரிக்கெட் மீது இருந்த ஆர்வத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக முதல் தர போட்டிகளில் விளையாடிய அவர், ஆஸ்திரேலிய அணி சுற்றுப் பயணத்தில் முதன் முறையாக இடம்பிடித்துகாபா டெஸ்டில் பிளேயிங் லெவனில் இடம்பிடித்த ஷமர் ஜோசப், வெஸ்ட் இண்டீஸ் அணியின் வரலாற்று சாதனையின் நாயகான இன்று மிளிர்ந்துள்ளார். அவர் இன்னும் பல உயரங்கள் உயர நாமும் வாழ்த்துவோம்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *