இங்கிலாந்தில் கழிவறைக்குள் இறந்து கிடந்த பச்சிளம் குழந்தை… பொலிசார் விடுத்துள்ள கோரிக்கை
இங்கிலாந்திலுள்ள மதுபான விடுதி ஒன்றின் கழிவறைக்குள் பச்சிளம் குழந்தை ஒன்று இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியது.
கழிவறைக்குள் இறந்து கிடந்த பச்சிளம் குழந்தை…
இங்கிலாந்தின் Leedsஇல் அமைந்துள்ள Three Horseshoes pub என்னும் மதுபான விடுதியிலுள்ள கழிவறை ஒன்றில், அப்போதுதான் பிறந்த பெண் குழந்தை ஒன்று உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதால், விடுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை மாலை 4.45 மணியளவில், அந்த குழந்தையின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது
இந்நிலையில், அந்த குழந்தையைப் பெற்ற தாய்க்கு பொலிசார் அழைப்புவிடுத்துள்ளார்கள். இப்படி ஒரு குழந்தையை பெற்ற அந்த பெண்ணின் உடல் நலமும் பரிதாபகரமாக இருக்கும் என்பதால், அவரது உடல் நலனை கவனிப்பதற்காகவாவது தங்களை அணுகுமாறு அந்த பெண்ணுக்கு பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
பொலிசாரை அணுக தயக்கமாக இருந்தால், அந்தப் பெண் Leeds தாய் சேய் நல அமைப்பை அணுகலாம் என்றும் அவர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளார்கள்.
இதற்கிடையில், மதுபான விடுதிக்கு முன்பதிவு செய்து வந்து, அசௌகரியமான சுழலை எதிர்கொள்ள நேர்ந்தவர்களிடம் அந்த விடுதி வருத்தம் தெரிவித்துக்கொண்டுள்ளது.