தக தகன்னு மின்னும் சருமத்திற்கு ஒரு கைபிடி கொய்யா இலை போதும்

ஒரு சுவையான பழமாக கொய்யா பழம் பற்றி அனைவருக்கும் தெரியும். ஆனால் கொய்யா இலைகளில் இருக்கும் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா?

ஆம். பலவிதமான தோல் பராமரிப்பு நன்மைகளையும் இது வழங்குகிறது. இந்த இலையாது பலருக்கும் தெரியாத பல திறன்களைக் கொண்டுள்ளன.

கிராமப்புற பகுதிகள் பல நோய்களுக்கு சிகிச்சையளிக்க கொய்யா மற்றும் அதன் இலைகளைப் பயன்படுத்துகின்றது. எனவே கொய்யா இலை வைத்து எப்படி சருமத்தையும் முடியையும் பராமரிக்கலாம் டின்பது பற்றி தெரிந்துக்கொள்வோம்.

கொய்யா இலைகளை சருமத்திற்கு பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள்
முகப்பருக்களுக்கு சிகிச்சை அளிக்கிறது
முகப்பரு மற்றும் கருப்பு புள்ளிகள் சருமத்தின் அழகையை கெடுக்கும் எனலாம். கொய்யா இலைகள் முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளை நீக்க உதவுகிறது.

சில கொய்யா இலைகளை நசுக்கி, முகப்பரு மற்றும் கரும்புள்ளிகள் மீது தடவவும். சிறிது நேரம் வைத்திருந்து தண்ணீரில் கழுவினால் முகமானது ஜொலிக்கும்.இதை தினமும் செய்து நல்லது.

கரும்புள்ளிகளுக்கு சிகிச்சை அளிக்கிறது
கரும்புள்ளிகளுக்கு சிகிச்சை அளிக்க, கொய்யா இலைகளை சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து மூக்கில் ஸ்க்ரப் செய்து, கழுவி எடுத்தால் கரும்புள்ளிகளானது நீங்கி விடும்.

வயதான சருமத்தை குறைக்கும்
கொய்யா இலைகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. அவை தோல்கள் வயதாகுவதை தடுக்கும். இலைகளை வேகவைத்து சருமத்தின் மீது வைக்கலாம்.

அரிப்பை போக்கும்
கொய்யா இலைகளில் ஒவ்வாமையை தடுக்கும் சக்தி அதிகமாக இருகிறது. எனவே இதை ஒவ்வாமை ஏற்படும் போது பயன்படுத்தலாம்.

வெயிலில் சருமம் கருத்தல்
கொய்யா இலைகளை நன்கு அரைத்து அதனுடன் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் பூசி வந்தால், வெயிலில் செல்லும் போது ஏற்படும் கருமை குறையும்.

சரும அழுக்கு நீக்கம்
அரைத்த கொய்யா இலையுடன் ரோஸ் வாட்டர், முல்தானி மெட்டி கலந்து முகத்தில் தினமும் தடவி வந்தால், சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கும்.

முகத்திற்கு கொய்யா இலைகள் பேஸ்ட்
தேவையானவை
கொய்யா இலைகள்
5-6 தேக்கரண்டி
தண்ணீர்
ஒரு எலுமிச்சை

செய்முறை
கொய்யா இலைகளை எடுத்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்து, பேஸ்ட் போல் கலந்துக்கொள்ளவும்.
அடுத்து எலுமிச்சை பிழிந்துக்கொள்ளவும்.
அதை சருமத்தில் தடவி, அரை மணி நேரம் அப்படியே வைக்கவும்.
இறுதியாக குளிர்ந்த நீரில் கழுவி எடுக்கலாம்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *