மனமணக்கும் ஐய்யர் வீட்டு வெண் பொங்கல்: ரெசிபி இதோ
காலை உணவு பட்டியலில் பலருக்கும் மிகவும் பிடித்தமான மெனு வெண் பொங்கல். இதில் சமச்சீரான சத்துகள் நிறைந்துள்ளன.
அதிலும் ஐய்யர் வீடுகளில் செய்யப்படும் வெண் பொங்கலின் மணமும், சுவையும் தனித்துவமாக இருக்கும்.
அருமையான சுவையில், ஐய்யர் வீட்டு வெண் பொங்கல் வீட்டிலேயே எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பச்சரிசி- ½ கப்
பாசி பருப்பு- ½ கப்
தண்ணீர்- 3¾ கப்
நெய்- 3 ஸ்பூன்
மிளகு- 1 ஸ்பூன்
சீரகம்- ¾ ஸ்பூன்
நறுக்கிய இஞ்சி- 1 ஸ்பூன்
முந்திரி- 10
பெருங்காயம்- ½ ஸ்பூன்
கறிவேப்பிலை- 2 கொத்து
உப்பு- தேவையான அளவு
செய்முறை
முதலில் அரிசி மற்றும் பருப்பை ஒன்றாக சேர்த்து 3- 4 முறை நன்குகழுவி சுத்தம் செய்து எடுத்துக்கொள்ளவும்.
ஒரு குக்கரில் கழுவி வைத்துள்ள அரிசி, பருப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி 3- 4 விசில் விட்டு எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு வாணலில் நெய் சேர்த்து அதில் மிளகு சேர்த்து பொரிந்ததும் அதில் சீரகம், நறுக்கிய இஞ்சி, முந்திரி,பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து பொங்கலில் சேர்த்து கிளறவும்.
பின் பொங்கலுக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான ஐய்யர் வீட்டு வெண் பொங்கல் தயார்.