வீட்டில் கற்பூரம் காட்டினால் வாஸ்து தோஷம் உடனே நீங்கும்
வாஸ்து தோஷம் உங்கள் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை கொண்டு வருகிறது.
வீட்டில் வாஸ்து குறைபாடுகள் இருப்பதன் முதல் அறிகுறி பண இழப்பு. குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள் அல்லது நோய்களும் வாஸ்து குறைபாடுகளைக் குறிக்கின்றன.
வாழ்க்கை சீராக இருக்க வேண்டுமென்றால் இந்த வாஸ்து குறைபாடுகளைப் போக்க வேண்டும்.
வீட்டில் எப்போதும் பிரச்சனையாக இருப்பதற்கு காரணம் வீட்டின் வாஸ்துதோஷமாக இருக்கலாம். அதற்குரிய எளிய பரிகாரம் செய்து பலன் பெறுங்கள். பூஜைகளின் மூலம் வாஸ்து தோஷங்களை நீக்கலாம். அதற்காகப் பெரிய சிரமங்கள் எதுவும் படத் தேவையில்லை.
வீட்டிலேயே வாஸ்து தோஷத்தைப் போக்க பல வல்லுநர்கள் கூறும் பரிகாரங்கள் பற்றி பார்க்கலாம்.
தோஷங்களை நீக்க வாஸ்து பரிகாரம்
ஐந்து அல்லது ஆறு கற்பூரத்தை எடுத்து மண் விளக்கில் எரிக்கவும்.
வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் சிறிய கற்பூரக் குச்சிகளை வைத்தால் அது தானாகவே மறைந்து விடும். இதனால் வீட்டில் இருக்கும் வாஸ்து பிரச்சினைகள் மறைந்து விடும் என்று நம்பப்படுகிறது.
தினமும் காலையில் வீட்டின் சமையலறையில் கற்பூரத்தை எரித்தால், நல்லது. அதனுடன் கிராம்புகளை சேர்த்து எரிக்கலாம்.
மேலும் வீட்டின் வாஸ்த்து பிரச்சினை அதிகரித்தால் உடனே வாஸ்து நிபுணரைத் நாடுதல் நல்லது.