Chana Pulao : குழந்தைகள் விரும்பும் லன்ச் பாக்ஸ் ரெசிபி – சன்னா புலாவ்!
தேவையான பொருட்கள்
கொண்டக்கடலை – ஒரு கப்
பாஸ்மதி அரிசி – 300 கிராம்
நெய் – 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
பட்டை – 2
கிராம்பு – 4
ஏலக்காய் – 2
பிரியாணி இலை – 1
சீரகம் – ஒரு ஸ்பூன்
சோம்பு – ஒரு ஸ்பூன்
வெங்காயம் – 2 (மெல்லியதாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 5 (கீறியது)
இஞ்சி-பூண்டு விழுது – 2 ஸ்பூன்
தக்காளி – 4 நறுக்கியது
மஞ்சள் தூள் – ஒரு ஸ்பூன்
மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
மல்லித் தூள் – ஒரு ஸ்பூன்
சன்னா மசாலா தூள் – 2 ஸ்பூன்
புதினா இலை – கைப்பிடி
கொத்தமல்லி இலை – கைப்பிடி
உப்பு – தேவையான அளவு
சுடு தண்ணீர்
செய்முறை
குக்கரில் ஊறவைத்த கொண்டக்கடலை, மஞ்சள் தூள், உப்பு, கிராம்பு, பிரியாணி இலை, மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் 4 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும்.
கடாயில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி, அதில் பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, சீரகம் சேர்த்து கலந்துவிடவேண்டும்.
பின் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை நன்றாக வதக்கவேண்டும்.
இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து கலந்து, பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவேண்டும்.
அடுத்து உப்பு, மிளகாய் தூள், மல்லித்தூள், சன்னா மசாலா தூள் சேர்த்து கலந்துவிடவேண்டும்.
வேகவைத்த கொண்டைக்கடலையை சேர்த்து கலந்துவிடவேண்டும்.
பின் புதினா, கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து, ஊறவைத்த பாஸ்மதி அரிசியை சேர்த்து கலந்துவிட்டு சூடான தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் 15 நிமிடங்கள் வேகவிடவேண்டும்.
சுவையான கொண்டக்கடலை புலாவ் தயார்.
இதற்கு, ரைத்தா, வெஜ் கிரேவி அல்லது நான் வெஜ் கிரேவி என எது வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும்.
இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் ஒரு லஞ்ச் பாக்ஸ் ரெசிபி ஆகும்.