இந்த ஆப்டிகல் இல்யூஷன் போதும்… நீங்கள் சுயமாக சிந்திப்பவரா இல்லை மற்றவர்களின் பேச்சைக் கேட்பவரா என்பதை கண்டுபிடிக்கலாம்!
உங்கள் குணாதிசியங்களைப் பற்றி உங்களுக்கே தெரியாத பல விஷயங்களை தெரிந்துகொள்ள ஆசையா? அப்படியென்றால் இருக்கவே இருக்கிறது அப்டிகல் இல்யூஷன் டெஸ்ட். ஜாலியாகவும், விளையாட்டுத்தனமாகவும் இருந்தாலும் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பல விஷயங்களை உள்ளடக்கிய ஒன்று.
உங்களை பற்றி நன்றாக புரிந்துகொள்ள இது உதவுகிறது. பாரம்பரியமான ஆளுமைத்திறனை சோதிக்கும் பரிசோதனை போன்றது அல்ல இது. கேள்வி, பதிலாக இல்லாமல் வெறும் படம் மட்டுமே இதிலிருக்கும். ஒருவகையில் புதிர் நிறைந்த விளையாட்டு என்று கூட இதை சொல்லலாம். உங்கள் அறிவுத்திறனை, பார்வைத்திறனை கூட இதன் மூலம் சோதிக்கலாம்.
கீழே உள்ள இமேஜை நன்றாகப் பாருங்கள். அழகும் புதிரும் நிறைந்த இந்தப் படத்தை முதன் முதலில் @psychologylove100 என்ற நபர் இணையத்தில் பகிர்ந்திருந்தார். ஆப்டிகல் இல்யூஷன் குறித்து சமூக ஊடகத்தில் பதிவிடுவதால் இவர் பிரபலமாக அறியப்படுகிறார். இவரது பதிவுகள் நமது ஆளுமையை வெளிப்படுத்தக்கூடியதாக இருக்கும்.
இங்கே கொடுத்துள்ள ஆப்டிகல் இல்யுஷன் படத்தில் மரங்கள் அடர்ந்த சாலையில் ஒருவர் நடந்து செல்கிறார்; அதேப்போல் இன்னொரு கோணத்தில் பார்க்கும் போது மரங்கள் எல்லாம் சேர்ந்து மனிதனின் முகம் போலவும் தோன்றுகிறது. இந்தப் படத்தை பார்க்கும் போது உங்களுக்கு முதலில் எது தெரிகிறதோ அதை வைத்து நீங்கள் சுயமாக சிந்திப்பவரா அல்லது மற்றவர்களின் பேச்சைக் கேட்டு நடப்பவரா என்பதை தெரிந்துகொள்ள முடியும்.
சாலையில் நடந்து செல்லும் மனிதன்:
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் சாலையில் நடந்து செல்லும் மனிதன் தெரிந்தால், நீங்கள் எப்படிபட்டவர் தெரியுமா? எந்தவொரு கருத்தையும் உறுதியோடு கூறுவீர்கள். உங்கள் கருத்தை மற்றவர்களிடம் எடுத்துக் கூற எப்போதும் தயங்கமாட்டீர்கள். உங்களின் தனித்துவம் மீது உங்களுக்கே பெருமிதமாக இருக்கும். பிரபலமாக இருக்கிறது என்பதாலேயே அந்த விஷயத்தின் மீது நாட்டம் கொள்ளமாட்டீர்கள். உங்களுக்கு பிடித்தமான, நீங்கள் நம்பும் விஷயங்களில் மட்டுமே அக்கறை கொள்வீர்கள். சுயமாக சிந்திப்பீர்கள். உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் அறிவுரை கேட்டாலும், உங்கள் மனது என்ன சொல்கிறதோ அதன்படி மட்டுமே நடப்பீர்கள். இதுகுறித்து யார் என்ன சொன்னாலும் கவலைப்படமாட்டீர்கள்.
மரத்தில் தெரியும் மனிதனின் முகம்:
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் பார்வைக்கு முதலில் மரத்தில் உள்ள மனிதனின் முகம் தெரிந்தால், நீங்கள் எப்படிபட்டவர் தெரியுமா? மற்றவர்களின் கருத்திற்கு அதிக மதிப்பு கொடுப்பீர்கள். பிரச்சனை இல்லாத அமைதியான வாழ்க்கையை நீங்கள் விரும்புவதால், அடுத்தவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என தெரிந்துகொள்வதில் ஆர்வமாக இருப்பீர்கள். இனிமையானவர், மகிழ்ச்சியானவர் என மக்கள் உங்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில் நீங்களோ சிக்கலான சூழ்நிலையை எப்படி கையாள்வது எனத் தெரியாமல் திணறிக் கொண்டிருப்பீர்கள். உங்களைச் சுற்றியுள்ள நபர்களின் கருத்துகளுக்கு அதிக மதிப்பு கொடுப்பீர்கள். எந்த முடிவு எடுக்க வேண்டுமென்றாலும், அவர்களது யோசனையையும் கேட்பீர்கள். ஒருவேளை அவர்கள் உங்கள் திட்டத்தை மறுக்கும் பட்சத்தில், உங்களுக்கு பிடித்திருந்தாலும் அதை கைவிடுவீர்கள்.