இது தெரியுமா ? ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க…

பசி எடுக்க பாட்டி வைத்தியம் :-

  • முளைக்கீரையுடன் மிளகு, சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம், மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து கொதிக்க வைத்து சாப்பிட்டால் பசியின்மை நீங்கி, நல்ல பசி உண்டாக்கும்.
  • புதினா இலைச்சாறு, எலுமிச்சை சாறு இரண்டையும் தலா 100 மிலி அளவில் எடுத்து கால் கிலோ தேனுடன் சேர்த்து காய்ச்சி இறக்கிக் கொள்ளவும். இதை காலை மாலை இரு வேளையும் 15 மிலி அளவுக்குச் சாப்பிட்டால் நன்றாகப் பசி எடுக்கும்.
  • கொத்தமல்லிச் சாறில் பெருஞ்சீரகம், ஓமம் இரண்டையும் ஊற வைத்து, உலர்த்திப் பொடியாக்கி, தினமும் உணவுக்கு முன் 2 கிராம் அளவுக்குச் சாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும். ஜீரண சக்தியும் அதிகரிக்கும்.
  • கை அளவு கறிவேப்பிலையை மூன்று மிளகு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் நல்ல பசி உண்டாகும்.
  • வெங்காயத்தாளுடன் சிறிது இஞ்சி சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் நல்ல பசி உண்டாகும்.
  • முள்ளங்கிக் கீரை சாறில் மிளகை ஊற வைத்துப் பொடியாக்கி, அதிகாலையில் 2 கிராம் அளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டால் நன்றாக பசி எடுக்கும்.
  • பிரண்டையின் இளந்தண்டை நெய்விட்டு வதக்கிச் சாப்பிட, சுவையின்மை, ருசியின்மை நீங்கி, நன்றாகப் பசி எடுக்கும்.
  • தூதுவளைக் கீரையை நன்றாக அரைத்துச் சாறு எடுத்து, மிளகுத் தூள் மற்றும் தேன் கலந்து குழந்தைகளுக்குக் கொடுத்தால் நன்றாகப் பசி எடுக்கும்.
  • முடக்கத்தான் கீரையுடன் சின்ன வெங்காயம், சீரகம், மஞ்சள்தூள் ஆகியவற்றைச் சேர்த்துக் கஷாயமாக்கிச் சாப்பிட்டால் நன்றாகப் பசி எடுக்கும்.
  • நல்வேளைக் கீரையுடன் சிறிது சீரகம், மஞ்சள் சேர்த்து சாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும்.
  • ஆரைக்கீரையைப் பருப்பு சேர்த்து சமைத்துச் சாப்பிட்டால் நல்ல ருசியும் பசியும் உண்டாகும்.
  • புளியாரைக் கீரையுடன் மிளகு, சீரகம், பூண்டு, மஞ்சள் சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டால் நன்றாகப் பசி எடுக்கும்.
  • சுக்காங் கீரையுடன் சிறிது இஞ்சி, பூண்டு இரண்டையும் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் நன்றாகப் பசி எடுக்கும்.
  • முள்ளிக்கீரையை மிளகு, சீரகம் சேர்த்துக் கஷாயமாக்கிச் சாப்பிட்டால் நன்றாக பசி எடுக்கும்.
  • துயிலிக் கீரையுடன் பருப்பு சேர்த்து கடைந்து சாப்பிட்டால் நன்றாகப் பசி எடுக்கும்.
  • பாற்சொரிக் கீரையுடன் மிளகு, சீரகம், பூண்டு, மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து சூப் செய்து அதிகாலையில் சாப்பிட்டால் நன்றாக பசி எடுக்கும்.
  • சாணாக்கிக் கீரையை மிளகு, பூண்டு, வெங்காயம், மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து அவித்துச் சாப்பிட்டால் நன்றாக பசி எடுக்கும்.

1. வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.

2. வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.

3. புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும்.

4. குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *