சலார் பட இயக்குனருக்கு இத்தனை கோடி சம்பளமா? பெரிய ஹீரோவை ஓரம் தள்ளிய இயக்குநர்!
திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சலார் படத்திற்காக அதன் இயக்குனர் வாங்கிய சம்பளம் குறித்த தகவல்கள் ரசிகர்களால் விவாதிக்கப்பட்டு வருகிறது. பல முன்னணி ஹீரோக்கள் வாங்கிய சம்பளத்தை விடவும் இயக்குனர் பிரசாந்த் நீல் அதிக சம்பளம் வாங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரபாஸ், பிரித்விராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கிய சலார் திரைப்படம் கடந்த வெள்ளி அன்று வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. தமிழ்நாட்டில் சலார் படத்திற்கு போதிய வரவேற்பு இல்லாவிட்டாலும், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி வட்டாரங்களில் சலார் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
வெளியான 3 நாட்களில் மட்டும் இந்த திரைப்படம் ரூ. 400 கோடியை தாண்டி வசூலித்துள்ளது. இன்று கிறிஸ்துமஸ் விடுமுறை தினம் என்பதால் சலாரின் வசூல் வேட்டை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கே.ஜி.எஃப். 1 மற்றும் கேஜிஎப் 2 படங்களை இயக்கிய பிரசாந்த் நீல் சலார் படத்தை இயக்கியிருப்பதால் அந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகம் காணப்பட்டது.
முன்னதாக சலார் கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி வெளியாகும் என்று படக் குழுவினர் அறிவித்திருந்தனர். இருப்பினும் கிராபிக்ஸ் வேலை காரணமாக வெளியீடு டிசம்பருக்கு தள்ளி வைக்கப்பட்டு கடந்த வெள்ளி அன்று ரிலீஸ் ஆனது.
இதையும் படிங்க – பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறும் நபர் யார்? சம்பளமாக இத்தனை லட்சமா?
இந்தப்படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் ரூ. 50 கோடி சம்பளத்தை வாங்கியுள்ளார் என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவியுள்ளது. 2 பாகங்களாக சலார் திரைப்படம் வெளியாகிறது. முதல் பாகம் மெகா ஹிட் ஆகியுள்ள நிலையில், அடுத்த பாகத்திற்கான ஷூட்டிங் குறித்த விபரங்களை படக்கூடிய விரைவில் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.