ஜேர்மனில் இருந்து யாழ் சென்ற பெண்ணிடம் கைவரிசை காட்டிய சகோதரர்கள்: வெளியாகிய சிசிரிவி காணொளி

ஜேர்மன் நாட்டில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த பெண்ணொருவரின் கைப்பையை நுாதனமான முறையில் திருடிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சங்கானையைச் சேர்ந்த 28 வயது பெண் மற்றும் 21 வயது ஆண் சகோதரர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதோடு சந்தேக நபர்களிடம் இருந்து திருடப்பட்ட பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஜேர்மனியை சேர்ந்த குறித்த பெண், பொருட்களை கொள்வனவு செய்வதற்காக யாழ். திருநெல்வேலி சந்தைக்கு வந்த போது, அவரின் கடவுச்சீட்டு உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள், 500 யூரோ மற்றும் 20, 000 இலங்கை ரூபா அடங்கிய கைப்பையை கைக்குழந்தையுடன் வந்த பெண்ணொருவர் நூதனமான முறையில் அபகரித்துள்ளார்

கண்காணிப்பு கமராவின் உதவி

இந்நிலையிலேயே, திருட்டுச் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் வெளிநாட்டவரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, கண்காணிப்பு கமராவின் உதவியுடன் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய யாழ்ப்பாண மாவட்ட பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கீழ் இயங்கும் புலனாய்வு பிரிவினர் சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

மேலும், திருடப்பட்ட பொருட்கள் மேலதிக விசாரணைகளுக்காக கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *