No Boil No Oil: 5 நிமிடத்தில் சூப்பரான வடை செய்வது எப்படி?
தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது No Boil No Oil என்ற உணவு வகைகள். இது மிகவும் சத்தாகவும் தயார் செய்வதற்கு இலகுவாகவும் இருப்பதாக பலரும் தெரிவிக்கின்றனர்.
எப்போதும் சைவ உணவு என்றால் வடை இல்லாம் இருக்காது. வடையானது எண்ணெயில் குளித்தெழும்பி தான் தயார் நிலைக்கு வரும் எனலாம்.
ஆனால் இந்த No Boil No Oil என்ற முறையில் வடையை தயார் செய்வோமானால் இலகுவான மற்றும் சத்தான வடையை பெறலாம். அது எப்படி என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
முருங்கை கீரை – கைப்பிடி
தேங்காய் துருவல் – கைப்பிடி
மிளகு தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையானளவு
சீரக தூள் – 1 டீஸ்பூன்
வறுத்த வேர்கடலை பொடி – 2 டீஸ்பூன்
சோம்பு – 1 டீஸ்பூன்
செய்முறை
முதலில் கீரையும் தேங்காய் துருவலையும் நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.
தேங்காய் துருவலில் உள்ள எண்ணெய் வெளியில் வரும் வரையில் பிசைந்துக்கொள்ளவும்.
பின் அதில் அனைத்து பொருட்களையும் கலந்து மீண்டும் 5 நிமிடத்திற்கு பிசைந்துக் கொள்ளவும்.
இறுதியாக கையில் உருண்டை போன்று உருட்டி, உள்ளங்கையில் வைத்து தட்டையாக்கினால் No Boil No Oil வடை தயார்!