ஒரே வாரத்தில் குதிகால் வெடிப்பை நீக்கும் இலகுவான 5 வழிகள்
பொதுவாகவே அனைவரும் எதிர்க்கொள்ளும் பொதுவான பிரச்சினையாக இருப்பது குதிகால் வெடிப்பு. இது பல்வேறு காரணங்களால் ஏற்படலாம்.
பெரியவர்களிடையே மிகவும் பொதுவானது, இந்த கால் நிலை குதிகால் பிளவுகள் என்றும் அழைக்கப்படுகிறது.
இது அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது மற்றும் குளிர்காலத்தில் ஏற்படும்.
உங்கள் குதிகால் விளிம்பில் செதில்கள் உருவாகி பின் வலியாகவும் மாறும் மற்றும் தோல் மஞ்சள் நிறமாக மாறலாம்.
வெடிப்பு ஏற்படுவதற்கான காரணம்
வானிலை மாற்றம்
உடல் பருமன்
பூஞ்சை தொற்று
வைட்டமின் குறைபாடு
தைராய்டிசம்
கர்ப்பம்
குதிகால் வெடிப்பின் அறிகுறிகள்
மெல்லிய தோல்
அரிப்பு
கடுமையான வலி
இரத்தப்போக்கு
சிவத்தல்
அழற்சி
இந்த பிரச்சினையை எப்படி இலகுவான முறையில் வீட்டில் இருக்கும் எளிய பொருட்களை வைத்து செய்யலாம் என பார்க்கலாம்.
1) வாழைப்பழம்
2 பழுத்த வாழைப்பழங்களை மசித்து, அதை கால் பாதங்கள் முழுவதும் தடவவும். பின் நகங்கள், கால் விரல்களுக்கும் பூசி 20 நிமிடங்களுக்கு பின் காய வைத்து தண்ணீரில் கழுவவும். இதை தூங்குவதற்கு முன்பு இரண்டு வாரத்திற்கு செய்து வரலாம்.
2 ) தேன்
கால்களை மூழ்கும் அளவிற்கு சூடான நீரை எடுத்துக்கொள்ளவும். பின் அதில் தேன் சேர்த்து சுத்தம் செய்யவும். இறுதியாக தண்ணீரி ஊற வைத்து 20 நிமிடங்களுக்கு மசாஜ் செய்யலாம். இதை தூங்குவதற்கு முன்பு சில வாரத்திற்கு செய்து வரலாம்.
3 ) மரக்கறி எண்ணெய்
முதலில் கால்களை நன்கு சுத்தம் செய்து, மரக்கறி எண்ணெயை கால்கள் முழுவதும் தேய்த்துக்கொள்ளவும். அடுத்து காலுறை அணிந்துக்கொள்ளவும். இதை இரவு முழுவதும் அப்படியே வைத்து விடவும். சில வாரத்தில் சிறப்பான பலனை பெறலாம்.
4 ) வேஸ்லின் மற்றும் எலுமிச்சை
சூடான நீரில் கால்களை 15 நிமிடங்களுக்கு வைக்கவும். அதை துடைத்து விட்டு, வேஸ்லினுடன் எலுமிச்சை சாறு விட்டு நன்கு கலந்து கால் பாதம், விரல்களில் பூசவும். இதை தூங்குவதற்கு முன்பு செய்து வர நல்ல பலனை பெறலாம்.
5 ) அரிசி மாவு, தேன் மற்றும் வினிகர்
முதலில் ஒரு பாத்திரத்தில் அனைத்து பொருட்களையும் சேர்த்து கலந்துக்கொள்ளவும். அடுத்து கால்களை 10 நிமிடங்களுக்கு வெதுவெதுப்பான நீரில் மூழ்க வைத்துக் கொள்ளவும். பின் இந்த கலவையை பூசலாம். இவ்வாறு வாரம் 2-3 முறை செய்தால் நல்ல பலனை பெறலாம்.