ரஜினி – விஜய் – அஜித் ரியல் வசூல் மன்னன் யார்? தியேட்டர் கலெக்‌ஷன்ஸ் சொல்லும் உண்மைகள்!

2023 ஆம் ஆண்டு விடைபெற்று புதிய ஆண்டு பிறக்க உள்ள நிலையில் 2023 ஆம் ஆண்டில் திரையரங்குகளில் அதிகம் வசூல் ஈட்டிய திரைப்படங்கள் எது என்று பட்டியலை தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்க உரிமையாளர்கள் வெளியிட்டு வருகின்றனர். தங்கள் திரையரங்குகளில் அதிக வசூல் ஈட்டிய திரைப்படங்ளை ஒவ்வொரு திரையரங்கு உரிமையாளர்களும் வரிசைப்படுத்தி வரும் நிலையில் பெரும்பாலான திரையரங்குகளில் இந்தப் பட்டியலில் முதல் ஐந்து இடங்களை பிடித்துள்ள படங்களை தற்போது பார்க்கலாம்.

5 – பொன்னியின் செல்வன் 2:

மணிரத்தினம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், திரிஷா என்ற நட்சத்திர பட்டாளத்துடன் கடந்த ஆண்டு வெளியாகி வசூலில் மாபெரும் சாதனை படைத்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியாகி ஓரளவு நல்ல வரவேற்பு பெற்றது. முதல் பாகம் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த நிலையில் இரண்டாவது பாகம் அந்த எதிர்பார்ப்புகள் மூலம் நல்ல வசூலை திரையரங்கு உரிமையாளர்களுக்கு கொடுத்துள்ளது. இதன் அடிப்படையில் பெரும்பாலான திரையரங்கு உரிமையாளர்கள் PS 2 திரைப்படத்திற்கு தங்கள் திரையரங்குகளில் அதிக வசூலித்த திரைப்படங்கள் பட்டியலில் ஐந்தாவது இடத்தை கொடுத்துள்ளனர்

4. வாரிசு:

வம்சி கிருஷ்ணா இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் ஆண்டின் தொடக்கத்தில் பொங்கலுக்கு வெளியான வாரிசு திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது. தொடர்ந்து ஆக்சன் திரைப்படங்களில் நடித்து வந்த விஜய் குடும்ப செண்டிமெண்ட்டை மையப்படுத்தி நடித்திருந்து இந்த திரைப்படம் ஆண்டின் துவக்கத்தில் நல்ல வசூலை கொடுத்த திரைப்படம் என்ற அடிப்படையில் திரையரங்கு உரிமையாளர்கள் இந்த படத்திற்கு பெரும்பாலும் நான்காவது இடத்தை கொடுத்துள்ளனர்.

3. துணிவு:

எச் வினோத் இயக்கத்தில் அஜித், மஞ்சு வாரியர் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் ஆண்டின் தொடக்கத்தில் பொங்கலுக்கு வாரிசு திரைப்படத்துடன் ஒரே நாளில் களம் கண்டது. அஜித் விஜய் இருவரில் யாருக்கு அதிக வரவேற்பு உள்ளது என்பதை தீர்மானிக்கும் திரைப்படமாக பார்க்கப்பட்ட இந்த போட்டியில் துணிவு திரைப்படம் முன்னிலை பெற்றது. தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளும் வாரிசு திரைப்படத்தை காட்டிலும் தங்களுக்கு துணிவு திரைப்படம் அதிக வசூலித்து கொடுத்ததாக பதிவு செய்துள்ளனர்.

2. ஜெயிலர்:

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றி திரைப்படங்களில் ஒன்றாக மாறியது. உலகம் முழுவதும் 600 கோடி ரூபாய் வரை வசூல் செய்த ஜெயிலர் திரைப்படம் தமிழகத்தில் உள்ள திரையரங்குகளிலும் வசூல் மழை பொழிந்தது. ரஜினியின் தர்பார் அண்ணாத்த உள்ளிட்ட திரைப்படங்கள் தொடர்ந்து ரஜினியின் உச்சத்தை தக்கவைக்க தவறிய நிலையில் இதற்கு ஜெயிலர் திரைப்படம் முற்றுப்புள்ளி வைத்தது. பெரும்பாலான திரையரங்கில் ஜெயிலர் திரைப்படத்திற்கு முதல் இரண்டு இடங்களில் ஒரு இடத்தை பரிசளித்தன் அடிப்படையில் சராசரியாக இந்த பட்டியலில் ஜெயிலர் திரைப்படம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

1. லியோ:

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், திரிஷா நடிப்பில் வெளியான லியோ வசூலில் முதலிடம் பிடித்து உள்ளதாக பெரும்பாலான திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதிக பொருள் செலவில் உருவான லியோ திரைப்படம் வசூல் சாதனைகளை குறிவைத்து வெளியானது. லோகேஷ் கனகராஜ் முந்தைய திரைப்படங்கள் ஏற்படுத்தி இருந்த எதிர்பார்ப்புகள் இந்த திரைப்படத்தின் முதல் நாள் டிக்கெட் விற்பனையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த எந்த விலை கொடுத்தாவது டிக்கெட் வாங்க விஜய் ரசிகர்கள் படையெடுத்தனர். இதன் அடிப்படையில் முதல் இடத்தை பெரும்பாலான திரையரங்குகளில் லியோ திரைப்படம் தாக்கி உள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *