Director Ameer: சூர்யா நடிப்பில் என்னைவிட சீனியர்.. அச்சத்தை வெளிப்படுத்திய இயக்குநர் அமீர்!
சென்னை: நடிகர் சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கவுள்ள படம் வாடிவாசல். தற்போது விடுதலை 2 படத்தில் கவனம் செலுத்திவரும் வெற்றிமாறன் தொடர்ந்து வாடிவாசல் படத்தை இயக்கவுள்ளார்.
இதேபோல தற்போது சுதா கொங்கராவுடன் இணைந்து புறநானூறு படத்தில் நடிக்கவுள்ள சூர்யா, இந்தப் படத்தை தொடர்ந்து வாடிவாசல் படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தடுத்தப் படங்களில் கமிட்டாகிவரும் அவர் அடுத்ததாக பாலிவுட்டில் கர்ணா படத்தில் நடிக்கவும் கமிட்டாகியுள்ளார். ஆனால் முன்னதாகவே அறிவிக்கப்பட்ட வாடிவாசல் படத்திற்கு அவர் முக்கியத்துவம் தருவார் என்று எதிர்பார்க்கலாம்.
வாடிவாசல் படம் அறிவிக்கப்பட்டு பல மாதங்கள் ஆன நிலையில், சூர்யா மற்றும் வெற்றிமாறன் இருவரும் தங்களது கமிட்மெண்ட்களில் பிசியாகியுள்ளனர். இதனால் இந்தப் படம் கைவிடப்பட்டதா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்தது. ஆனால் படம் கைவிடப்படவில்லை என்று தயாரிப்பு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் இயக்குநர் அமீர் முக்கியமான கேரக்டரில் நடிக்கவுள்ளதும் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. தாணு தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள இந்தப் படத்தின் டெஸ்ட் சூட் நடத்தப்பட்ட நிலையில், இதற்கான பயிற்சிகளிலும் சூர்யா ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
நடிகர் சூர்யா: நடிகர் சூர்யா தற்போது கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார். வரலாற்று பின்புலத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் 10க்கும் மேற்பட்ட கெட்டப்புகளில் சூர்யா நடித்துள்ளார். மேலும் படத்தில் பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்டவர்களின் கேரக்டர்களும் சிறப்பாக அமைந்துள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி மிகச்சிறப்பான வரவேற்பை கொடுத்துள்ள நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. படம் ஆகஸ்ட் மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தின் அடுத்தடுத்த போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
புறநானூறு படம்: இந்தப் படத்தை தொடர்ந்து சுதா கொங்கராவுடன் சூர்யா43 படத்தில் இணையவுள்ளார் சூர்யா. இந்தப் படத்தில் கல்லூரி மாணவராக அவர் நடிக்கவுள்ளார். சூர்யாவுடன் துல்கர் சல்மான், நஸ்ரியா உள்ளிட்டவர்கள் நடிக்கவுள்ள நிலையில் படத்திற்கு புறநானூறு என்று பெயரிடப்பட்டுள்ளது.