இந்தியாவில் அறிமுகமாகி இருக்கும் மலிவு விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் – விலை மற்றும் சிறப்பம்சங்கள்!
பெங்களூருவை தளமாக கொண்ட எலெக்ட்ரிக் வெஹிகிள் தயாரிப்பு நிறுவனமான சிம்பிள் எனர்ஜி (Simple Energy) தனது இரண்டா வது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரான டாட் ஒன்-ஐ சமீபத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஏற்கனவே சிம்பிள் எனர்ஜி நிறுவனத்தின் Simple One விற்பனையில் இருக்கும் நிலையில், இதன் மலிவு விலை வெர்ஷனாக தற்போது Simple Dot One எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரான Dot One, ரூ.1 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) என்ற அறிமுக விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய டாட் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது என்று சிம்பிள் எனர்ஜி கூறுகிறது.
இந்த புதிய ஸ்கூட்டர் ரெட், பிரேசன் பிளாக், கிரேஸ் ஒயிட் மற்றும் அஸூர் ப்ளூ உள்ளிட்ட 4 கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும் என்று நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. தவிர நிறுவனம் அறிமுக சலுகையின் ஒரு பகுதியாக LightX மற்றும் BrazenX உள்ளிட்ட கலர் ஆப்ஷன்களையும் வழங்குகிறது.
இந்த புதிய ஸ்கூட்டர் ரெட், பிரேசன் பிளாக், கிரேஸ் ஒயிட் மற்றும் அஸூர் ப்ளூ உள்ளிட்ட 4 கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும் என்று நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. தவிர நிறுவனம் அறிமுக சலுகையின் ஒரு பகுதியாக LightX மற்றும் BrazenX உள்ளிட்ட கலர் ஆப்ஷன்களையும் வழங்குகிறது.
ஜனவரி 2024-ல் அறிவிக்கப்படும் புதிய விலை தற்போதைய அறிமுக விலையை விட சற்று அதிகமாக இருக்கும். புதிதாக அறிமுகமாகி இருக்கும் சிம்பிள் டாட் ஒன் மாடலானது, ஏற்கனவே விற்பனையில் இருக்கும் சிம்பிள் ஒன் போன்ற அதே பிளாட்ஃபார்மை அடிப்படையாகக் கொண்டது. மேலும் அம்சங்கள் மற்றும் வடிவமைப்பின் அடிப்படையில் மாறாமல் உள்ளது மற்றும் ஃபிக்ஸ்ட் 3.7 kWh பேட்டரி பேக்கை கொண்டிருக்கும்.
சிங்கிள் வேரியன்ட்டில் வழங்கப்படும் டாட் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 151 கிமீ என்கிற சர்ட்டிஃபைட் ரேஞ்சுடன் வருகிறது. அதாவது இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 151 கிலோமீட்டர் வரை செல்லும். இந்த ஸ்கூட்டரில் 8.5 கிலோவாட் எலெக்ட்ரிக் மோட்டார் உள்ளது. இது 72nm பீக் டார்க்கை வெளிப்படுத்துகிறது.
மேலும் தனது லைன்-அப்-ல் டாட் ஒன் வேகமான ஸ்கூட்டர் என்று நிறுவனம் கூறுகிறது. இது வெறும் 2.77 வினாடிகளில் 0 முதல் 40 கிமீ வேகத்தை எட்டும் என்கிறது சிம்பிள் எனர்ஜி நிறுவனம். இந்த ஸ்கூட்டரில் இருக்கும் பாதுகாப்பு அம்சங்களில் CBS டிஸ்க் பிரேக்ஸ் உள்ளன. இந்த ஸ்கூட்டரின் சீட்டிற்கு அடியில் அன்டர் சீட் ஸ்டோரேஜாக 35 லிட்டர் ஸ்டோரேஜ் ஸ்பேஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்கூட்டரில் 7.0-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் மற்றும் ஆப் கனெக்டிவிட்டிக்கான சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு ஓஎஸ் மூலம் இயங்கும் இது டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், ப்ளூடூத் கனெக்டிவிட்டி, பேட்டரி மற்றும் ரேஞ்ச் இன்போ கிராபிக்ஸ், கால் அலெர்ட் மற்றும் OTA அப்டேட்ஸ்களுடன் வருகிறது. சிம்பிள் டாட் ஒன்னில் 12-இன்ச் வீல்கள் மற்றும் டியூப்லெஸ் டயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.