Rohit Sharma: தென் ஆப்பிரிக்க மண்ணில் ரோகித்துக்கு காத்திருக்கும் சவால் என்ன?
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோஹித் சர்மா பல்வேறு தடைகளையும், பல்வேறு சூழ்நிலைகளையும் கடந்து ஒரு திடமான ஆல்-ஃபார்மட் வீரராக மாறிய விதம் அனைவரையும் கவர்ந்துள்ளது. அவர் 462 சர்வதேச போட்டிகளில் விளையாடி 18,239 ரன்கள் மற்றும் 45 சதங்களுடன் உள்ளார்.
இருப்பினும், அவருக்கு தென் ஆப்பிரிக்கா மண்ணில் ஒரு சவால் உள்ளது – இந்த மண்ணில் டெஸ்டில் ரன்கள் குவிப்பது அவருக்கு தொடர்ச்சியாக சவாலாகவே இருந்து வருகிறது. இதற்கு முன் 2013-14 மற்றும் 2017-18 ஆகிய இரண்டு சுற்றுப்பயணங்களில், எட்டு இன்னிங்ஸ்களில் 15.38 சராசரியுடன் 47 ரன்கள் மட்டுமே அதிகபட்சமாக எடுத்தார் ரோகித்.
கடைசியாக 2017-18 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவில் விளையாடியபோது, 1, 10, 10 மற்றும் 47 என்ற வரிசைக்குப் பிறகு சவாலான, சிக்கலான சூழ்நிலைகளில் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு சரிவரமாட்டார் என்று அவர் நீக்கப்பட்டார், காகிசோ ரபாடா மூன்று முறை ரோகித் விக்கெட்டை வீழ்த்தினார்.
அந்த மோசமான ஃபார்ம் அவருக்கு அடுத்து இங்கிலாந்தில் நடந்த 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இடத்தை இழக்கச் செய்தது. ஆனால் பேட்ஸ்மேன் ரோகித் தனது தன்னம்பிக்கையை விட்டுக் கொடுக்கவில்லை. “நாளை சூரியன் மீண்டும் உதிக்கும்” என்று முன்னர் ட்விட்டர் என்று அழைக்கப்பட்ட சமூக ஊடக தளத்தில் ஒரு அறிக்கை மூலம் அவர் தனது புறக்கணிப்புக்கு எதிர்வினையாற்றியிருந்தார்.
ஆனால், 2014 தொடரில் இந்தியா சிறப்பாக விளையாடியபோது, ரோஹித்தை தவிர மற்ற அனைவரும் ரன் எடுத்தனர். ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த முதல் டெஸ்டில் புஜாரா 150 ரன்களும், கோலி ஒரு சதமும், ரஹானே இரண்டாவது டெஸ்டில் அரைசதமும், 90 ரன்களும் எடுத்தனர். ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த முதல் டெஸ்டில் ரோஹித் 14 மற்றும் 6 ரன்களிலும், செஞ்சூரியனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் 0 மற்றும் 25 ரன்களிலும் ஆட்டமிழந்தார்.
2014 ஆம் ஆண்டில், இங்கிலாந்தில், அவருக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது, சவுதாம்ப்டனில் நடந்த மூன்றாவது டெஸ்டில், அவர் 28 ரன்களில் ஆட்டமிழந்த பின்னர் மீண்டும் தனது இடத்தை இழந்தார்.
ரோஹித்தின் ஆட்டத்தின் அழகு அவரது திறமையின் மீது அவர் வைத்திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கை.
தென்னாப்பிரிக்காவில் இந்த சாதனையை முறியடிக்க ரோஹித்துக்கு அடுத்த இரண்டு போட்டிகளே கடைசி வாய்ப்பாக இருக்கும். இப்போது கேப்டனாகவும் உள்ளார், போட்டிக்கு முன், அவர் சிறப்பாக செயல்படுவார் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார். நாமும் அப்படியே நம்புவோம்.