பசங்களுக்குத்தான் பசங்கள பத்தி தெரியும்… இணையத்தில் கவனம்பெறும் லவ்வர் பட டீசர்!
பல படங்களில் சின்ன வேடங்களில் நடித்து வந்த மணிகண்டனுக்கு ஜெய் பீம் திருப்புமுனை படமாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து அவர் நாயகனாக நடித்த குட் நைட் திரையரங்கில் வெளியாகி கமர்ஷியலாகவும், விமர்சனரீதியாகவும் வெற்றி பெற்றது.
இதையடுத்து மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்ஆர்பி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பில் பிரபுராம் வியாஸ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.
அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் மணிகண்டன் நடித்துள்ள படம் ‘லவ்வர்’. ஸ்ரீகெளரி பிரியா, கண்ணன் ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டீசர் தற்போது 4 மில்லியன் பார்வைகளை கடந்து யூடியூபில் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது.