லாபம் வேணும், ஆனா ரிஸ்க்கு எடுக்க கூடாது! – உங்களுக்கு தான் இந்த சூப்பரான திட்டம்

ந்தியர்கள் பெரும்பாலும் சேமிப்பு , முதலீடு என்றால் தங்கத்தில் முதலீடு செய்வது அல்லது வங்கிகளில் டெபாசிட் செய்வது, இவ்விரண்டை மட்டுமே பாதுகாப்பான முதலீடாக கருதுகின்றனர்.
ஆனால் இவற்றை விட அதிக லாபம் தரும் பல்வேறு பாதுகாப்பான முதலீட்டு திட்டங்கள் இருக்கின்றன. அதில் மிகவும் பிரபலமானது பிபிஎஃப் எனப்படும் பொது வருங்கால வைப்பு நிதி. ஏன் பிபிஎஃப் முதலீடு சிறந்தது: பொது வருங்கால வைப்பு நிதி மத்திய அரசின் திட்டம் எனவே உங்கள் முதலீடு பாதுகாப்பாக இருக்கும் என்பது உறுதி. அதே போல வட்டியும் குறிப்பிட்ட விகிதத்திற்கு ஏற்ப உறுதியாக வந்து சேரும். எனவே ரிஸ்க் எடுக்காம முதலீடு செய்து லாபம் காண வேண்டும் என நினைப்பவர்களுக்கு உகந்தது. ரூ.500இல் இருந்து முதலீடு செய்யலாம்: பொது வருங்கால வைப்பு நிதியில் ஓர் ஆண்டில் குறைந்தபட்சம் ரூ.500இல் இருந்து முதலீடு செய்யலாம். எனவே அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற முதலீட்டு திட்டம் இது. அதே போல அதிகபட்சமாக ஓராண்டுக்கு ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்ய முடியும். ஒரே முறை ரொக்கமாக முதலீடு செய்யலாம் அல்லது மாதந்தோறும் பணம் செலுத்தலாம். முதலீட்டு காலம்: பொது வருங்கால வைப்பு நிதியில் லாக் இன் பீரியட் எனப்படும் முதலீட்டு காலம் குறைந்தபட்சம் 15 ஆண்டுகள். குறைந்தது 15 ஆண்டுகளுக்கு உங்கள் பணம் கைக்கு கிடைக்காது. கூட்டு வட்டி என்பதால் லாபம் அதிகம்: பொது வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை அரசு அவ்வப்போது மாற்றி வருகிறது. தற்போதைய நிலவரப்படி ஓர் ஆண்டுக்கு 7.1% வட்டி வழங்கப்படுகிறது. இது கூட்டு வட்டி முறையில் கணக்கிடப்படுகிறது. உதாரணத்திற்கு கௌசல்யா என்பவர் இந்த ஆண்டில் ரூ.10,000 முதலீடு செய்துள்ளார் என வைத்துக் கொள்வோம். இந்த ஆண்டு இறுதியில் வட்டியுடன் சேர்த்து அவரது தொகை 10,710ஆக கூட்டப்பட்டு அடுத்த ஆண்டில் வட்டி கணக்கிடப்படும்.
இப்படி 15 ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் ரூ.10,000 முதலீடு செய்திருந்தால்முதலீடு செய்த தொகை = ரூ.1,50,000கிடைத்த வட்டி = ரூ.1,21,214முதிர்வு தொகை = ரூ. 2,71,214 வரிச் சலுகை கிடைக்குமா?: ஆம், பொது வருங்கால வைப்பு நிதிக்கு வருமான சட்டப்பிரிவு 80சி-இன் கீழ் வரி விலக்கு பெற முடியும். ஓராண்டுக்கு அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் வரை மட்டும் வரி விலக்கு கிடைக்கும். கிடைக்கும் வட்டிக்கு வரி உண்டா?: பொது வருங்கால வைப்பு நிதியின் மற்றொரு சிறப்பம்சம் இது. உங்களுக்கு கிடைக்கும் வட்டி தொகைக்கு வருமான வரி கிடையாது. முதிர்வடைந்த பின் உங்களுக்கு கிடைக்கும் ரொக்கத்திற்கும் வரி கிடையாது. ஏதேனும் ஒரு வருடம் முதலீடு செய்யவில்லையெனில்?: கௌசல்யா என்பவர் 2020ஆம் ஆண்டில் இருந்து பொது வருங்கால வைப்பு நிதியில் முதலீடு செய்து வருகிறார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *