இவ்ளோ பெரிய ஆளு ரோட்ல சர்வ சாதாரணமா பைக்ல வந்தாரா! நேர்ல பாத்ததும் ஒரு நிமிஷம் எல்லாரும் ஒறஞ்சு போயிட்டாங்க!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பைக்குகளில் ஒன்று ராயல் என்பீல்டு கான்டினென்டல் ஜிடி 650 (Royal Enfield Continental GT 650). இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ராயல் என்பீல்டு கான்டினென்டல் ஜிடி 650 பைக்கின் ஆரம்ப விலை (Price) 3.19 லட்ச ரூபாயாக உள்ளது.
அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 3.45 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். ராயல் என்பீல்டு கான்டினென்டல் ஜிடி 650 பைக்கில் 648 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 7,150 ஆர்பிஎம்மில் 47 பிஹெச்பி பவரையும், 5,250 ஆர்பிஎம்மில் 52 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.
இதே இன்ஜின்தான் ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 (Royal Enfield Interceptor 650) பைக்கிலும் வழங்கப்பட்டுள்ளது. இன்ஜின் மட்டுமல்லாது, சஸ்பென்ஸன், டயர்கள் மற்றும் பிரேக் ஆகிய அம்சங்களையும் இந்த 2 பைக்குகளும் பகிர்ந்து கொண்டுள்ளன. அதாவது இந்த 2 பைக்குகளிலும் ஒரே இன்ஜின், சஸ்பென்ஸன், டயர்கள் மற்றும் பிரேக் ஆகியவைதான் வழங்கப்பட்டுள்ளன.
ராயல் என்பீல்டு கான்டினென்டல் ஜிடி 650 பைக்கின் பெட்ரோல் டேங்க் கொள்ளளவு 12.5 லிட்டர்கள் ஆகும். இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் வாய்ந்த ராயல் என்பீல்டு கான்டினென்டல் ஜிடி 650 பைக்கை பிரபல மனிதர் ஒருவர் ஓட்டும் வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.
அவர் வேறு யாருமல்ல. சன்னி கௌஷல்தான் (Sunny Kaushal) அந்த பிரபலம். இவர் பாலிவுட் (Bollywood) திரையுலகில் மிகவும் பிரபலமாக உள்ள ஒரு நடிகர் (Actor) ஆவார். மும்பை (Mumbai) நகரில் ஒரு இடத்தில் இருந்து அவர் வேறு எங்கேயோ கிளம்பியபோது இந்த வைரல் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.
இங்கே குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால், சன்னி கௌஷல் முறையாக ஹெல்மெட் அணிந்து கொண்டு, ராயல் என்பீல்டு கான்டினென்டல் ஜிடி 650 பைக்கை ஓட்டியுள்ளார். இது அவரை பின் தொடர கூடிய ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் ஒரு நல்ல முன் உதாரணம் என்பதில் நமக்கு துளியும் சந்தேகம் இல்லை.
ஆனால் சன்னி கௌஷல் மும்பை மாநகர சாலைகளில், இந்த ராயல் என்பீல்டு கான்டினென்டல் ஜிடி 650 பைக்கை ஓட்டுவது இது முதல் முறை கிடையாது. இதற்கு முன்பாகவும் ஒரு சில முறை அவர் இதே பைக்கை மும்பை சாலைகளில் ஓட்டி வந்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோக்களும் வைரலாக பரவின என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.