பூகம்பமே வந்தாலும் சரி புல்லட் ரயிலுக்கு ஒன்னும் ஆகாது! இந்த ஒரு கருவி தான் உயிரையே காப்பாத்த போகுது!

இந்தியாவிலேயே முதல்முறையாக மும்பை-ஆமதாபாத் இடையே அமைய உள்ள புல்லட் ரயில் பாதையில் 28 சைஸ்மோமீட்டர்களை பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சைஸ்மோமீட்டர்கள் என்பது நிலநடுக்கத்தை முன்கூட்டியே கண்காணிக்கும் ஒரு கருவியாகும். பயணிகளின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு இது பொருத்தப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

தற்போது இந்தியாவின் முதல் புல்லட் ரயில் கொண்டு வருவதற்காக இந்திய அரசு ஜப்பான் நாட்டு அரசுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு மும்பை-ஆமதாபாத் இடையே புல்லட் ரயில் பாதையை அமைத்து வருகிறது. இதற்கான பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. பல்வேறு இடங்களில் பாதை கட்டுமான பணிகள் முடிந்து விட்டன. புல்லட் ரயில் எந்த அளவிற்கு வேகமாக செல்கிறதோ அதே அளவிற்கு பாதுகாப்பான ரயில் ஆகவும் இருக்க வேண்டும்.

புல்லட் ரயில் வேகமாக பயணிக்கும் போது அப்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டால் அது மிகப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் நிலநடுக்கத்தை முன்கூட்டியே அறிவதற்காக ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஷின்கான்சன் டெக்னாலஜி நிறுவனத்தின் சார்பில் உருவாக்கப்பட்ட சைஸ்மோமீட்டர்களை புல்லட் ரயில் பாதையில் பொருத்த திட்டமிட்டுள்ளனர். அதன்படி மொத்தம் 28 சைஸ்மோமீட்டர்கள் பொருத்தப்பட உள்ளன.

இந்த சைஸ்மோமீட்டர்கள் அப்பகுதியில் நிலநடுக்கம் வருவதற்கு முன்பே அதற்கு முந்திய லேசான அலைகளை கணித்து நிலநடுக்கம் வரப்போவதை முன்கூட்டியே அறிவித்து விடும். அது மட்டுமல்லாமல் நிலநடுக்கம் வருவது உறுதி செய்யப்பட்டால் உடனடியாக அப்பகுதியில் இயங்கும் அனைத்து புல்லட் ரயில்களும் தானாக எமர்ஜென்சி பிரேக் ஆக்டிவேட் செய்யப்பட்டு ரயில் பவர் ஷட் டவுன் செய்யப்படும் . இதனால் ரயில்கள் நில நடுக்கும் வரும்போது தொடர்ந்து பயணிக்காமல் நின்றுவிடும்.

இதற்கான தொழில்நுட்பத்தை தற்போது உட்பகுத்த திட்டமிட்டுள்ளனர். மொத்தம் இப்படியாக 28சைஸ்மோமீட்டர்கள் பொருத்தப்பட உள்ளன. இதில் 22சைஸ்மோமீட்டர்கள் ரயில் பாதை மற்றும் ரயில்வே ஸ்டேஷன் ஆகிய பகுதிகளிலும் பாக்கி உள்ள 6சைஸ்மீட்டர்கள் ரயில் செல்லும் பகுதியை சுற்றியுள்ள அபாயம் உள்ள பகுதிகளிலும் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பகுதிகள் எல்லாம் கடந்த 100 ஆண்டுகளில் 5லிட்டர் அளவுகோலுக்கு அதிகமான அளவு நிலநடுக்கத்தை சந்தித்த பகுதிகளாக தேர்வு செய்யப்பட்டு அங்கு இவை பொருத்தப்படுகின்றன.

இதற்காக விரிவான ஆய்வுகள் நடத்தப்பட்டு குறிப்பிட்ட இடங்களில் மண் பரிசோதனைகள் எல்லாம் செய்யப்பட்டு அதன் பின்பு தான் இந்த இடம் தேர்வு செய்யப்படுகிறது. இவை ஆக்டிவேட் செய்யப்பட்டவுடன் இதிலிருந்து வரும் சிக்னல்களை வைத்து நேரடியாக புல்லட் ரயில்களுடன் சிக்னல் செயல்பட்டு எமர்ஜென்சி பிரேக் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் எல்லாம் செய்யப்படும். புல்லட் ரயில் என்பது மணிக்கு 320 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டதாக வரவுள்ளது.

இந்த புல்லட் ரயில் சுமார் 508 கிலோமீட்டர் தூரத்தை கடக்க உள்ளது. இதற்காக 12 ஸ்டேஷன்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த பயணத்தை வெறும் 2 மணி நேரம் 7 நிமிடத்தில் முடிக்கும்படி இது கட்டமைக்கப்படுகிறது. அனைத்து ஸ்டாப்புகளிலும் நின்று சென்றால் 2 மணி நேரம் 58 நிமிடங்கள் வரை ஆகும். பணிகள் எல்லாம் முழு வீச்சில் நடந்து வருகின்றன.

2026-ம் ஆண்டு இந்தியாவில் முதல் புல்லட் ரயில் தனது இயக்கத்தை துவக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புல்லட் ரயில் பாதை என்பது இன்னும் நூற்றாண்டு கணக்கில் செயல்பாட்டில் இருக்க கூடிய ஒரு திட்டமாக இருக்கிறது. அதனால் இவை எல்லாம் முன்கூட்டியே கண்காணிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் எல்லாம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வளவு பெரிய இயற்கை சீற்றம் வந்தாலும் இந்த புல்லட் ரயில் பாதைக்கு எந்த சேதாரம் ஏற்பாடாக வகையில் இது உருவாக்கப்படுகிறது.

இந்தியாவின் முதல் புல்லட் ரயில் பாதை வெற்றிகரமாக நிறைவு பெற்றால் தொடர்ந்து இந்த புல்லட் ரயில் பாதை திட்டத்தை விரிவுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டபடி முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் புல்லட் ரயில்கள் கட்டமைக்கப்பட அதிகமான வாய்ப்புகள் உள்ளன. இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்த புல்லட் ரயில் மிகப் பெரிய சான்றாக இருக்கிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *