“வெற்றிக்கு எல்லா பெருமையும் ஒருவருக்குதான்.. அவர் நம்பிக்கைதான் காரணம்” – மெக்கலம் பேச்சு
இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு கடந்த ஆண்டுகளில் ஜோ ரூட் தலைமையில் நிறைய தோல்விகள் வந்தது. வெளிநாடுகள் என்று இல்லாமல் உள்நாட்டிலும் தோல்விகளை சந்தித்தார்கள்.
இதன் காரணமாக கேப்டன் பொறுப்பில் இருந்து அவர் நீக்கப்பட்டு பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக கொண்டுவரப்பட்டார். மேலும் புது இங்கிலாந்து டெஸ்ட் பயிற்சியாளராக நியூசிலாந்தின் முன்னாள் கேப்டன் பிரண்டன் மெக்கலம் கொண்டுவரப்பட்டார்.
இந்த ஜோடி இங்கிலாந்தில் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு போல தட்டையான ஆடுகளங்களை அமைக்க வைத்தது. மேலும் ஒருநாள் கிரிக்கெட்டை விளையாடுவது போலவே டெஸ்ட் கிரிக்கெட்டையும் விளையாடுவது என முடிவு செய்தது.
இவர்களது அதிரடியான முடிவு டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு புது மாற்றத்தையே ஏற்படுத்தியிருக்கிறது. தற்பொழுது எல்லா அணிகளும் இவர்களை பார்த்து டெஸ்ட் கிரிக்கெட்டை அதிரடியாக விளையாடுவதற்கு முயற்சி செய்கிறார்கள். குறிப்பாக ஒன்று இரண்டு வீரர்களையாவது அப்படி விளையாடுவதற்கு அணியில் வைக்கிறார்கள்.
மேலும் இந்தக் கூட்டணியின் பெரிய சாகச வெற்றியாக இந்தியாவிற்கு எதிராக இந்தியாவில் முதல் டெஸ்டில் பெற்ற வெற்றி அமைந்திருக்கிறது. இதன் காரணமாக இங்கிலாந்தின் பாஸ்பால் அணுகுமுறை மீதான விமர்சனங்கள் குறைந்து பிரமிப்பு அதிகரித்திருக்கிறது.
முதல் டெஸ்ட் வெற்றி குறித்து பயிற்சியாளர் மெக்கலம் பேசும் பொழுது “பென் ஸ்டோக்ஸ் டாம் ஹார்ட்லியை தேர்ந்தெடுத்த பொழுது மக்கள் எல்லோரும் சந்தேகமாகப் புருவத்தை உயர்த்தினார்கள். ஆனால் அது பொருத்தமான விஷயமாக இருக்கும் என்று நான் நம்பினேன்.