இதுக்கு பேசாம கிரிக்கெட்டில் இருந்தே ஓய்வு பெறலாம்.. சீனியர் வீரரை நோகடித்த ரோஹித்.. என்ன நடந்தது?

மூத்த வீரர் புஜாரா தன்னை இந்திய அணியில் தேர்வு செய்யாமல் ஒதுக்கி வைத்திருக்கும் நிலையில் உள்ளூர் தொடரான ரஞ்சி ட்ராபியில் சிறப்பாக ஆடி இரட்டை சதம் அடித்து உலக அளவில் அதிக இரட்டை சதம் அடித்த வீரர்களில் ஆறாவது இடம் பிடித்து சாதனை படைத்து இருந்தார் இப்போதாவது தனக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கும் என அவர் எதிர்பார்த்து காத்திருந்தார்.
இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளுக்கான அணியில் அவருக்கு இடம் அளிக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில் அப்போது அவருக்கு அணியில் இடம் அளிக்கப்படவில்லை. அடுத்து விராட் கோலி விலகிய போதும் கோலியின் அனுபவத்துக்கு இணையான டெஸ்ட் அனுபவம் கொண்ட புஜாரா தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்போதும் கேப்டன் ரோஹித் சர்மா பிடிவாதமாக ரஜத் படிதார் என்ற புதுமுக வீரரை அணியில் தேர்வு செய்ய வைத்தார்.
அடுத்து முதல் டெஸ்ட்டில் இந்தியா தோல்வி அடைந்த நிலையில், கே எல் ராகுல் காயம் காரணமாக விலகினார். இப்போதாவது புஜாராவுக்கு அணியில் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மற்றொரு புதுமுக வீரர் சர்ஃபராஸ் கான் அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார். சர்ஃபராஸ் கான் தேர்வை யாரும் தவறு என சொல்ல முடியாது. அவர் தற்போது உள்ளூர் மற்றும் சர்வதேச அளவில் டெஸ்ட் கிரிக்கெட் ஆடி வரும் வீரர்களில் மிக அதிக பேட்டிங் சராசரி கொண்ட வீரர். அவரை எப்போதோ இந்திய அணியில் தேர்வு செய்து இருக்க வேண்டும்.
எனினும், இந்தியா இங்கிலாந்து அணிக்கு முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்து இருக்கும் நிலையில், கோலி, ராகுல் போன்ற நிலையான பேட்ஸ்மேன்கள் அணியில் இல்லாத நிலையில், அனுபவம் வாய்ந்த புஜாராவை தேர்வு செய்து இருக்க வேண்டும். இன்னும் சொல்லப் போனால் சுப்மன் கில் அல்லது ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரையும் நீக்கி விட்டு புஜாரா, சர்ஃபராஸ் கான் ஆகியோரை மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்ய வைக்கலாம். ஆனால், புஜாரா பக்கமே திரும்ப மாட்டேன் என கேப்டன் ரோஹித் சர்மா பிடிவாதமாக இருக்கிறார்.