அவரோட கஷ்டத்தை படிச்சி பாத்த எனக்கு கண்ணீரே வந்துடுச்சி.. இளம்வீர் குறித்து – ஏ.பி.டி நெகிழ்ச்சி

அந்த வகையில் இந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக அட்டவணையிடப்பட்ட இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அந்த அணி விளையாடி முடித்துள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை எளிதாக வீழ்த்தி அபார வெற்றி பெற்று தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

அதனை தொடர்ந்து காபா மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலிய அணியை எட்டு ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி திரில் வெற்றியை ருசித்ததோடு சேர்த்து இந்த இரண்டு போட்டிகள் கொண்ட இந்த தொடரை ஒன்றுக்கு ஒன்று (1-1) கணக்கில் சமன் செய்தது.

இந்த இரண்டாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி பெற்ற பிரமாண்டமான வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக அந்த அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான ஷமர் ஜோசப் திகழ்ந்தார். ஏனெனில் ஆஸ்திரேலியா போன்ற ஒரு பெரிய அணியை அவர்களது சொந்த மண்ணில் இலக்கை நிர்ணயித்து விட்டு தடுப்பது என்பது சவாலான விடயம்.

ஆனால் ஷமர் ஜோசப் இரண்டாவது இன்னிங்ஸின் போது ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தார். இதன்மூலம் 27 ஆண்டுகள் கழித்து ஆஸ்திரேலிய மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் ஒரு டெஸ்ட் வெற்றியை பெற்று சாதனை படைத்துள்ளது.

இப்படி வெஸ்ட் இண்டீஸ் அணி பெற்ற இந்த வரலாற்று வெற்றிக்கு பின்னர் ஷமர் ஜோசப்பை பல்வேறு கிரிக்கெட் பிரபலங்களும் பாராட்டி வரும் வேளையில் தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரரான ஏபிடி வில்லியர்ஸ் அவரது சமூக வலைதள பக்கத்தின் மூலம் வாழ்த்தி சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *