ரோஹித்துக்கு அப்றம் அஸ்வின்.. 2023 உ.கோ தப்பை செய்யாதீங்க.. இந்திய அணி பற்றி ஹர்பஜன் கவலை
ஹைதராபாத் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்தியா முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்தை விட 190 ரன்கள் முன்னிலை பெற்றது. ஆனால் 2வது இன்னிங்ஸில் சுழலுக்கு சாதகமாக மாறிய ஹைதெராபாத் பிட்ச்சில் சொதப்பிய இந்தியா வெற்றியை கோட்டை விட்டது.
அதன் வாயிலாக வரலாற்றில் முதல் முறையாக தங்களுடைய சொந்த மண்ணில் 100க்கும் மேற்பட்ட ரன்களை முன்னிலையாகப் பெற்ற போட்டியில் இந்தியா அவமான தோல்வியை பதிவு செய்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. இந்நிலையில் முதல் போட்டியின் 2வது இன்னிங்ஸில் ரோகித் சர்மாவுக்கு பின் 2வது அதிகபட்ச ஸ்கோர் அஸ்வின் அடித்தார் என்பது தரமான சுழலை எதிர்கொள்வதில் இந்தியா திண்டாடுவதை காட்டுவதாக ஹர்பஜன் சிங் கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
ஹர்பஜன் கவலை:
எனவே அடுத்த போட்டியில் வெற்றி பெறுவதற்காக சுழலுக்கு சாதகமான மைதானத்தை அமைக்க வேண்டாம் என்று ஹர்பஜன் கேட்டுக் கொண்டுள்ளார். அப்படி செய்தால் 2023 உலகக் கோப்பை ஃபைனல் போல இந்தியா மீண்டும் தோற்க வாய்ப்புள்ளதாக கவலையை வெளிப்படுத்தும் அவர் இது பற்றி தன்னுடைய யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு.
“ராகுல் மற்றும் ஜடேஜா ஆகிய நல்ல ஃபார்மில் உள்ள வீரர்கள் காயத்தால் விலகுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. அவர்கள் எப்போது வருவார்கள் என்பது தெரியாத நிலையில் விராட் கோலியும் இல்லை. அவர் இருந்திருந்தால் இந்திய பேட்டிங் வரிசை தில்லாக செயல்பட்டிருக்கும். சுப்மன் கில் ஃபார்மின்றி தவிக்கிறார். ஸ்ரேயாஸ் தடுமாறுகிறார். தற்போதைய இந்திய அணி நன்றாக இருக்கிறது”
“ஆனால் அனுபவத்தில் தடுமாறுகிறது. ஆம் அங்கே ரோஹித் சர்மா இருக்கிறார். ஆனால் 2வது சிறந்த ஸ்கோரை அஸ்வின் அடித்தார். அந்த வகையில் நம்முடைய பேட்டிங் வரிசை பலவீனமாக இருக்கிறது. அடுத்த போட்டியில் அஸ்வின், அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ் இருப்பதால் இந்தியா சுழலுக்கு சாதகமான மைதானத்தில் விளையாட விரும்புவார்கள் என்று நினைக்கிறேன்”