5.4 ஓவரில் 98 ரன்கள் அடித்த சிஎஸ்கே தம்பி ஜேஎஸ்கே.. MI கேப்டவுன் அணி தோல்வி.. டுபிளசிஸ் அபாரம்
எஸ் ஏ டி 20 கிரிக்கெட் தொடரில் மிகவும் முக்கியமான ஆட்டமாக கருதப்பட்ட ஜோகனஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் எம் ஐ கேப் டவுன் அணிகள் இன்று பல பரிட்சை நடத்தின.
சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகளின் சொந்தமான இரு அணிகளும் நேற்று மோதியதால் ரசிகர்கள் மத்தியில் இந்த ஆட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
டாஸ் வென்ற ஜோகனஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. மழை குறுக்கிட்டதால் ஆட்டம் எட்டு ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதை அடுத்து எம் ஐ கேப்டவுன் அணியில் தொடக்க வீரர் ரெஸி வெண்டர்டூசன் 16 ரன்களும், ரியான் ரிக்கில்டன் 23 ரன்களும் எடுத்தனர்.
கேப்டன் பொலார்ட் வழக்கம் போல் அதிரடியாக விளையாடி 10 பந்துகளில் 33 ரன்கள் விளாசினார். இதில் நான்கு சிக்ஸர்களும், ஒரு பவுண்டரியும் அடங்கும். இதன் மூலம் எட்டு ஓவர் முடிவில் மும்பை அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 80 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 98 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று டக்வொர்த் லூயிஸ் விதிப்படி இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது.
இந்த இலக்கை 6 ஓவருக்குள் எட்டினால் போனஸ் புள்ளி ஜே எஸ் கே அணிக்கு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் டுப்ளசிஸ் மற்றும் டுபிளாய் ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். இருவரும் EA கிரிக்கெட் ஸ்போர்ட்ஸ் இல் வரும் கம்ப்யூட்டர் கேம் போல் பவுண்டரி சிக்ஸர்களாக அடிச்சு தள்ளினர்.