பொல்லார்டு செய்த குறுக்கு வழி.. பாப் கோபம்.. ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் கேப் டவுன் மும்பை இந்தியன்ஸ் போட்டியில் பரபரப்பு
தற்பொழுது சவுத் ஆப்பிரிக்காவில் டி20 லீக் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பங்கேற்கும் ஆறு அணிகளையும் ஐபிஎல் உரிமையாளர்கள் வாங்கி இருக்கிறார்கள்.
இந்த நிலையில் இன்று காலை மும்பை இந்தியன்ஸ் கேப் டவுன் அணியும், ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியும் மோதிக்கொண்ட போட்டியில் நடைபெற்றது.
டாஸ் வென்ற சூப்பர் கிங்ஸ் கேப்டன் பாப் டு பிளிசிஸ் தங்கள் அணி முதலில்பந்து வீசும் என அறிவித்தார். மும்பை இந்தியன்ஸ் கேப் டவுன் அணிக்கு கீரன் பொல்லார்ட் கேப்டனாக இருக்கிறார்.
மழையில் நடைபெற்ற இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த கேப் டவுன் மும்பை இந்தியன் சனி 8 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்புக்கு 80 ரன்கள் எடுத்தது. ரிக்கல்டன் 16 பந்துகளில் 23 ரன்கள், கேப்டன் கீரன் பொல்லார்டு 10 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார்கள்.
இதற்கடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கு எட்டு ஓவர்களில் 98 ரன்கள் என இலக்கு கொடுக்கப்பட்டது. அந்த அணிக்கு துவக்க ஜோடி பிளாய் மற்றும் கேப்டன் பாப் இருவரும் அதிரடியாக விளையாடி நான்கு ஓவர்களில் 57 ரன்கள் சேர்த்து வெற்றியை ஏறக்குறைய நெருங்கினார்கள்.
இந்த ஆட்டத்தில் மழை அச்சுறுத்தல் இருந்து கொண்டு இருந்தது. முழுமையாக ஐந்து ஓவர்கள் பந்து வீசினால் மட்டுமே போட்டிக்கு முடிவு தெரிவிக்கப்படும். இந்த நிலையில் ஐந்தாவது ஓவரை கேப் டவுன் மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ரபாடா வீச வந்தார்.
அப்பொழுது அவர் முதல் பந்தை வீச ஓடி வரும் பொழுது, நேரத்தை கடத்தி மழையின் காரணமாக ஆட்டத்தை முடிவில்லாமல் போகச் செய்வதற்காக, கேப்டன் கீரன் பொல்லார்டு அவரைத் தடுத்தார்.