“என்னை விட என் தம்பிதான் நல்ல பேட்ஸ்மேன்” இந்திய அணிக்கு தேர்வான சர்ப்ராஸ் கான் பேட்டி
சகோதரர்கள் யாரும் சேர்ந்து விளையாடும் அளவுக்கு இந்திய கிரிக்கெட்டில் இல்லை. தற்பொழுது மும்பையைச் சேர்ந்த சர்பராஸ் கான் மற்றும் அவரது தம்பி முஷீர் கான் இருவரும் இந்திய கிரிக்கெட்டில் சேர்ந்து விளையாடுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.
சர்ப்ராஸ் கான் மும்பை மாநில அணிக்காக கடந்த இரண்டு மூன்று ரஞ்சி சீசன்களில் டன் கணக்கில் ரன்கள் குவித்துள்ளார். முச்சதம் வரை அடித்திருக்கிறார். சென்ற ஆண்டில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக அந்த நாட்டில் விளையாடிய டெஸ்ட் தொடரிலேயே அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அமையவில்லை.
இதற்குப் பிறகு அவர் தொடர்ந்து காத்திருந்து இந்தியாவில் நடைபெறும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை. முதல் டெஸ்ட் முடிந்த பிறகு ஜடேஜா கேஎல்.ராகுல் காயம் அடைய இவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக 161 ரன்கள் இவர் அடித்தார். அதே நாளில் இவருடைய தம்பி முசீர் கான் அயர்லாந்து அணிக்கு எதிராக 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலகக் கோப்பையில் 118 ரன்கள் அடித்தார்.
சர்ப்ராஸ் கான் தன்னுடைய தம்பி முசிர் கான் பற்றி கூறுகையில் “அவர் என்னைவிட சிறந்த பேட்ஸ்மேன். அவர் என் தம்பி என்பதற்காக நான் இதைச் சொல்லவில்லை. சில நேரங்களில் பேட்டிங்கில் நான் கஷ்டப்படும் பொழுது, அவருடைய பேட்டிங் நிற்போம் எப்படி இருக்கிறது என்பதை பார்த்து சரி செய்து கொள்வேன். அவருடைய மேனரிசம் மற்றும் பேட் ப்லோ மிக அதிகமாக இருக்கும். சில சமயங்களில் நான் அவருடன் சேர்ந்து பேட்டிங் செய்யும்பொழுது அவரைப் பார்த்து கற்றுக் கொள்கிறேன்.