வயிற்றை சுத்தம் செய்ய உதவும் 5 பழங்கள்.., கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க
கண்ட உணவுகளை வாங்கி சாப்பிடுவதன் மூலம் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன.
இது போன்ற உணவுகள் நாம் எடுத்துக்கொள்வதன் மூலம் செரிமானமாகாமல் வயிற்றில் அப்படியே அழுக்காக தங்கிவிடுகின்றன.
இதன்காரணமாக, மலச்சிக்கல், சோர்வு, வலிமையற்ற உணர்வு, வாயுத் தொல்லை, வயிற்றில் வீக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
அந்தவகையில் வயிற்றை சுத்தம் செய்ய உதவும் 5 பழங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
1. பப்பாளி
மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க பப்பாளி சாப்பிட வேண்டும். இதில் இருக்கும் பாப்பேன்(Papain) எனும் என்சைம் செரிமானத்தை மேம்படுத்தவும், மலச்சிக்கல் பிரச்னையை வரவிடாமல் தடுக்கவும் உதவுகிறது.
பப்பாளியை தினமும் சாப்பிட்டு வந்தால், வயிறு தொடர்பான பிரச்னைகள் வராமல் தடுக்கலாம்.
2. ஆப்பிள்
ஆப்பிளில் உள்ள அதிகளவு நார்ச்சத்து குடல் இயக்கங்களை ஊக்குவிக்க உதவுகிறது. இதில் இருக்கும் பெக்டீன் எனும் நார்ச்சத்து குடல் இயக்கங்களை மேம்படுத்துகிறது.
மேலும், மலச்சிக்கலை போக்க உதவுகிறது. ஆப்பிளை எப்போதும் தோலுடன் சேர்த்து உண்ண வேண்டும்.
3. ஆரஞ்சு
மலச்சிக்கல் உள்ளவர்கள் ஆரஞ்சு பழத்தை எடுத்துக்கொள்வதன் மூலம், செரிமான அமைப்பை வலுப்படுத்த உதவுகிறது.
இதில் நார்ச்சத்தும் அதிகளவில் உள்ளது. இதனால் குடலில் தேங்கியுள்ள அசுத்தங்கள் வெளியேற ஆரஞ்சு பழங்கள் உதவுகிறது.
4. கொய்யா
கொய்யா பழத்தில் ஃபைபர், பிரக்டோஸ், சார்பிடால் போன்ற கூறுகள் நிறைந்துள்ளன. இவை குடல் இயக்கங்கள் சரிவர செயல்பட உறுதுணையாக இருக்கின்றன.
தொடந்து இதை சாப்பிட்டு வந்தால், வயிறு தொடர்பான பல பிரச்னைகளில் இருந்து விடுபடலாம்.
5. கிவி
கிவிப் பழத்தில் நீர்ச்சத்தும், நார்ச்சத்தும் அதிகளவில் இருப்பதால் மலச்சிக்கலை போக்க உதவுகிறது.
இதிலிருக்கும் ஆக்டினிடின் எனும் என்சைம் குடலை சுத்தம் செய்ய பெரிதளவில் உதவுகிறது.