ஒரே வாரத்தில் முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவும் இளநீர் ஹேர் வாஷ்: அவசியம் தெரிஞ்சிக்கோங்க

இளநீர் சுவையான பானம் மட்டுமல்ல கூந்தலுக்கு எண்ணற்ற நன்மைகளையும் வழங்கக்கூடியது.

இதில் வைட்டமின்கள், தாதுக்கள், எலக்ட்ரோலைட்டுகள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

முடிகளுக்கும், உச்சந்தலைக்கும் போதுமான நீர்ச்சத்தை அளிப்பதால், கூந்தல் வறட்சி அடைவதை தடுத்து பொடுகு போன்ற பிரச்சினைகளை குறைக்கும்.

கூந்தல் பராமரிப்பில் இளநீரை பயன்படுத்துவதால் கிடைக்கும் பலன்களை குறித்து விரிவாக பார்க்கலாம்.

கூந்தல் பராமரிப்பிற்கு உதவும் இளநீர்
இளநீரில் இருக்கும் ஈரப்பதமூட்டும் பண்புகள் முடி நெகிழ்வுத்தன்மை அடைய பயன்படுகிறது. மேலும், முடி வெடிப்பு, முடி உடைதல் போன்றவற்றை குறைக்க செய்கிறது.

இளநீரில் இருக்கும் ஊட்டச்சத்து பண்புகள் முடி உதிர்வை குறைக்கும். மயிர்கால்களை வலுவாக்கி முடியையும் பலப்படுத்தும்.

இளநீரின் பி.எச் அளவு கூந்தலின் பி.எச் அளவை ஒத்திருக்கும். இந்த சமச்சீரான பி.எச் அளவுகள் மென்மையான மற்றும் பளபளப்பான கூந்தலுக்கு வழிவகுக்கும்.

இளநீரில் உள்ள பண்புகள் கூந்தலில் ஏற்படும் முடிச்சுகள் மற்றும் சிக்கல்களை நீக்கி மிருதுவாக்க உதவும் இயற்கை கண்டிஷனராக பயன்படுகிறது.

குறிப்பாக சுருள் முடி, அடர்த்தியான முடி கொண்டவர்கள் கூந்தலை அலசுவதற்கு இளநீரை பயன்படுத்துவது சிறந்த தேர்வாக அமையும்.

கூந்தல் பராமரிப்பில் இளநீரை பயன்படுத்துவது இனிமையான நறுமணத்தை வழங்கும். கூந்தலுக்கு புத்துணர்ச்சியையும், வாசனையையும் ஏற்படுத்தும்.

இளநீரில் இருக்கும் பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன.

மேலும் மயிர்கால்களுக்கு ஊட்டமளித்து, ஆரோக்கியமான, வலுவான முடி வளர்ச்சியை தூண்டுகின்றன.

இளநீரை ஹேர் வாஷாக தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் அடர்த்தியான, நீளமான கூந்தலுக்கு வழிவகுக்கும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *