உடலிற்கு வலு சேர்க்கும் மொறுமொறு உளுந்து முறுக்கு: சூப்பரான ஈவினிங் ஸ்னாக்ஸ்
உளுந்தில் கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் இரும்புச் சத்துக்கள் அதிகம் உள்ளன. மேலும் இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.
உளுந்து கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் எலும்புகள், மூட்டுகளின் வலிமை அதிகரிக்கும்.
அந்தவகையில், உளுந்து வைத்து ஈசியான ஒரு ஈவினிங் ஸ்னாக்ஸ் மொறுமொறு உளுந்து முறுக்கு எப்படி செய்வது என்று
தேவையான பொருட்கள்
உளுந்து – 1 கப்
அரிசி மாவு – 4 கப்
உப்பு – 1 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
வெள்ளை எள் – 2 ஸ்பூன்
எண்ணெய் – 2 ஸ்பூன்
தண்ணீர்- 3 கப்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் உளுந்து மற்றும் தண்ணீர் சேர்த்து 2 – 3 முறை நன்றாக அலசி கொள்ளுங்கள்.
அடுத்து அடுப்பில் குக்கர் வைத்து அதில் கழுவிய உளுந்தை சேர்த்து அதில் 3 கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து தீயை அதிகமாக வைத்து 5 விசில் வரும்வரை வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து வேகவைத்த உளுந்தை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.
பின் அரைத்த மாவை ஒரு அகலமான பாத்திரத்திற்கு மாற்றி அதனுடன் அரிசி மாவை சேர்த்து கொள்ளுங்கள். பின் உப்பு, கையால் நுனிக்கிய சீரகம் மற்றும் வெள்ளை எள் சேர்க்க வேண்டும்.
பிறகு அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி நன்கு சூடானதும் அதையும் இந்த மாவில் சேர்த்து நன்கு கலந்து பிணைந்துகொள்ளவும்.
அடுத்து அடுப்பில் வாணல் வைத்து அதில் முறுக்கு சுட தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடு செய்து கொள்ளுங்கள்.
தற்போது முறுக்கு செய்யும் உரலை எடுத்து அதில் தேவையான அளவு முறுக்கு மாவை நிரப்பி ஒரு தட்டை எடுத்து எண்ணெய் தடவி அதன் மீது வட்டமாக முறுக்கை பிழிந்து கொள்ளுங்கள்.
பிறகு நன்கு சூடான எண்ணெயில் பிழிந்து வைத்துள்ள முறுக்கை சேர்த்து வேக வைத்து எடுத்தால் சுவையான மொறுமொறு உளுந்து முறுக்கு தயார்.