முகம் பளபளக்க ஒரு சொட்டு பால் இருந்தால் போதும்
பொதுவாகவே பெண்களுக்கு தங்களது சருமத்தை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை தான் அதிகமாகவே இருக்கும். பலரும் பல விதமான முறைகளில் தங்களது சருமத்தை பாதுகாத்துக்கொள்ள இயற்கை முறையை நாடி செல்வது வழக்கம்.
அதில் பலருக்கும் உதவுவது பால் மற்றும் மஞ்சள் கற்றாழை போன்ற இலகுவான பொருட்களாகும். அந்தவகையில் பால் வைத்து எப்படி முகத்தை கூடிய விரைவில் அழகுப்படுத்தலாம் என தெரிந்துக்கொள்வோம்.
பால் என்று சொல்லக்கூடிய பொருள் தான் முகத்தை பளபளக்க செய்யும். பாலேடு என்பதில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் அதிகமாக காணப்படுகிறது.
கிடைக்கும் நன்மைகள்
இது சருமத்திலிருந்து இறந்த சரும செல்களை நீக்க உதவும்.
இளமையான சருமமாக வைத்திருக்க உதவும்.
இதை முகத்தில் மட்டும் அல்லாமல் முழங்கைகள், முழங்கால்கல், தோல்கள் போன்ற இடத்திலும பூசலாம்.
சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க இதை பூசலாம்.
முகத்தில் முகப்பரு அல்லது தோல் அழற்சி இது உதவும்.
பால் வைத்து சருமத்தை எப்படி அழகாக்கலாம்?
பச்சை பாலை ஒரு பஞ்சில் நனைத்து முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரால் கழுவவும்.
பச்சை பாலை நன்கு பிசைந்த வாழைப்பழத்துடன் கலந்து கை, கால் முகத்தில் தடவினால் நல்லது.
ஓட்ஸ் பொடி, தேன், வால்நட் பவுடர் ஆகியவற்றை பால் சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவினால் நல்லது.
பால், தேன், வைட்டமின் ஈ மாத்திரை மற்றும் மசித்த வெள்ளரிக்காயுடன் கலந்து கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் சேர்க்கலாம்.